புதிதாக கடமையேற்றுள்ள அம்பாறை காலால்படை தளபதியுடன் பள்ளிவாசல்களின் தலைவர்கள் சந்திப்பு ! - Sri Lanka Muslim

புதிதாக கடமையேற்றுள்ள அம்பாறை காலால்படை தளபதியுடன் பள்ளிவாசல்களின் தலைவர்கள் சந்திப்பு !

Contributors

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட 24 வது காலால் படை தளபதி பதவி உயர்வு பெற்று சென்றதன் பிற்பாடு அவ்விடத்துக்கு புதிதாக மேஜர் ஜெனரலாக கடமையேற்றுள்ள அதிகாரியை அம்பாரை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்களின் தலைவர்கள் சந்தித்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர். கடந்த தனிமைப்படுத்தல் காலங்களில் மனித நேயத்துடன் படைபிரிவுகள் நடந்து கொண்டமை, தனிமைப்படுத்தலை ஒழுங்குபடுத்துதல் முதல் நிவாரணம் வழங்குதல் மற்றும் பொருளாதார சீரமைப்புக்களை முன்னெடுப்பதிலும் அவர்களது ஒத்துழைப்பு இருந்தமை எல்லோரினதும் பாராட்டைப்பெற்ற விடயங்கள் இங்கு நினைவு கூறப்பட்டது.

இதன்போது எனக்கு முன்னர் இருந்த அதிகாரிகள் மக்களோடு நட்புறவை பேணி அவர்களின் நலன்களில் அக்கறை கொண்டது போன்று எனது பணிகளும் இருக்கும் என்றும் மக்கள் அச்சப்படாமல் தத்தமது நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று அம்பாறை மாவட்ட 24 வது காலால் படை தளபதி அம்பாரை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்களின் தலைவர்களுக்கு வாக்குறுதியளித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team