புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கி ஆக்கவுரிமை பத்திரம் (Patent)பெற்றுள்ள ஸாஹிரா தேசியக் கல்லூரி கல்முனை மாணவன் » Sri Lanka Muslim

புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கி ஆக்கவுரிமை பத்திரம் (Patent)பெற்றுள்ள ஸாஹிரா தேசியக் கல்லூரி கல்முனை மாணவன்

i

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சமூகத்தில் உள்ள தேவைகளை ஆராய்ந்து பல புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குதல் என்கிறார் ஸாஹிரா தேசியக் கல்லூரி கல்முனை மாணவன் கபூர் முஹம்மட் அப்ராத் அஹ்ஸன். அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச சபைக்கு உட்பட்ட வொலிவோரியன் கிராமத்தில் வசிக்கும் அப்துல் கபூர் மற்றும் ரிபாயா ஆகியோரின் இளைய மகனான இவர் ஸாஹிரா கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்கும் இவரது கண்டுபிடிப்பு தானியங்களின் பதர்களை வேறாக்கும் மற்றும் மண்களை பல பிரிவுகளாக பிரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி உள்ளார்.

இந்த இயந்திரம் குறைந்த நேரத்தில் குறைந்த மின்சக்தியை பயன்படுத்தி அதிகளவான தானியங்களின் பதர்களை வேறாக்க முடிவதோடு கட்டுமான பணிகளில் ஈடுபடும் கட்டுமான பணியாளர்கள் மண்ணை பல பகுதியாக பிரிப்பதற்கு அதிக நேரத்தை செலவிடுகின்றனர் இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதால் குறைந்த நேரத்தில் அதிகமாக மண்ணை பல பிரிவுகளாக பிரிக்க முடிவதோடு .இவ் இயந்திரத்தின் உற்பத்தி செலவை தவிர வேறு எந்த ஒரு செலவு ஏற்படாது எனவும் எதிர்காலத்தில் இந்த இயந்திரத்தை சந்தைப்படுத்த இருப்பதாகவும் கூறுகிறார் இந்த மாணவன்.

விஞ்ஞான தொழினுட்ப ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழு நடாத்திய போட்டியில் தேசிய ரீதியில் பங்குபற்ற வாய்ப்பை பெற்ற மாணவன். தனது பாடசாலை காலத்திலேயே பல கண்டுபிடிப்புக்களை உருவாக்கியதோடு நின்றுவிடாமல். இலங்கை புலன் உரிமைச் சொத்து நிறுவனத்தில் தனது புத்தாக்கத்திற்கு ஆக்கவுரிமை பத்திரத்தையும் இளம் வயதில் பெற்றுள்ளதோடு இலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழு இலங்கை கண்டுபிடிப்பாளர்களை கௌரவிக்கும் முகமாக வழங்கும் இலங்கை கண்டுபிடிப்பாளர் அடையாள அட்டையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் தரம் 5 படிக்கும் காலத்தில் தனது பாடசாலையில் உயர்தர தொழினுட்ப பிரிவை சேர்ந்த மாணவர் ஒருவர் இயந்திரம் ஒன்றை உருவாக்கி தனது வகுப்பறைக்கு கொண்டு வந்து விளங்கப்படுத்திய போதே தானும் இதே போன்று பல புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்க வேண்டும் என்று தனது ஆழ் மனதில் உதித்த ஆர்வத்தினால் தற்போது பல புத்தாக்கங்களை உருவாக்க முடிகிறது என்கிறார் அப்ராத்.

இலங்கையில் உள்ள கண்டுபிடிப்பாளர்களுக்காக போட்டிகளை நடாத்தும் நிறுவனங்களான இலங்கை பொறியியலாளர் நிறுவனம் என்பன நடாத்திய போட்டியில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு. களனி பல்கலைக்கழகம் தேசிய ரீதியாக நடாத்தும் Vidya – 2017 Green innovation என்ற போட்டியிலும் கலந்து கொள்ளவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார் .

இம் மாணவன் மற்ற மாணவர்களுக்கு கூறிக்கொள்வது என்னவென்றால் சாதனை படைக்க துடிக்கும் பலர் விடுகின்ற ஒரு தவறு தமது ஆற்றலையும் திறமையையும் வைத்து தமக்காக ஒரு துறையைத் தெரிவு செய்யாமல் விடுவது ஆகவே தனக்குள் என்ன திறமை உள்ளதோ அத் துறையை தெரிவு செய்து நாம் எமது இலக்கை நோக்கிப் பயணிக்கும் சந்தர்பத்தில் வாழ்க்கையில் பெற முடியும் என்கிறார் அவரது கருத்தாக

இச் சாதனை பயணத்தில் முக்கியமாக நன்றி கூறுகிறார் ஆற்றல்களையும் தந்த அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும். எனது ஒவ்வொரு சாதனையும் அவனது அருள்தான். அடுத்து அவனது மிகப் பெரும் அருளான எனது அன்பு பெற்றார்களான வாப்பா கபூர் ( பாயீஸ்) மற்றும் உம்மா ரிபாயா சகோதர, சகோதரிகள். என்னை துவழ விடாது தொடர்ந்து பல வழிகளில் ஊக்கமூட்டி என் சாதனைக்கு அடிப்படைக் காரணியாக அவர்களுக்கும், அடுத்து நன்றி கூற வேண்டியவர்களின் நீண்ட பட்டியலில் முக்கியமாக எனது கல்லூரி அதிபர் எம்.எஸ். முஹம்மட், கல்லூரி புத்தாக்குனர் கழக பொருப்பாசிரியர் ஏ. ஆதம்பாவா, வகுப்பாசிரியர் அத்துடன் எனது பாடசாலை உயர் தர தொழினுட்ப பிரிவு மாணவன் சவ்பாத் நானா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனது கண்டுபிடிப்பு பயணத்தில் எனது தாயின் சகோதரர் ரிபாய் மாமாவின் பங்கு முக்கியமானது. நான் இயந்திரங்களை உருவாக்க தேவையான உபகரணங்களை பல இடங்களில் சென்று பெற்று தருவார். எனது கண்டுபிடிப்புக்களின் பின்னால் அவரது ஒத்துழைப்பும் உள்ளது.

( தகவல் :- சாய்ந்தமருது இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான ஒன்றியம், புத்தாக்குனர் கழகம் ஸாஹிரா தேசியக் கல்லூரி கல்முனை )

i

Web Design by The Design Lanka