புதிய சாரதி அனுமதி பத்திரத்திரத்தை அறிமுகப்படுத்த திட்டம் - Sri Lanka Muslim

புதிய சாரதி அனுமதி பத்திரத்திரத்தை அறிமுகப்படுத்த திட்டம்

Contributors

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பஸ் விபத்துக்கள் காரணமாக புதிய சாரதி அனுமதி பத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்படும் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் கனரக சாரதிகளுக்கான அனுமதி பத்திரம் கொண்டவர்களுக்கு பயணிகள் பஸ் செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்டதினால் மாத்திரம் பயணிகள் போக்குவரத்து பஸ்களை செலுத்த முடியாது என்றும் ராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதனால் பொது போக்குவரத்து சாரதிகள் அனுமதி பத்திரம் அறிமுகம் செய்யப்படும். அந்த சாரதிக்கு இரண்டு வாரங்களுக்கு விசேட பயறிசி வழங்கப்படவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Web Design by Srilanka Muslims Web Team