புதிய ஜனாதிபதிக்கு கூட்டணியின் வாழ்த்து! - Sri Lanka Muslim

புதிய ஜனாதிபதிக்கு கூட்டணியின் வாழ்த்து!

Contributors
author image

Farook Sihan - Journalist

 

பதவியை விட்டு விலகிச் செல்லும் முன்னைய ஜனாதிபதிக்கு உரிய மதிப்புக் கொடுத்து இலங்கை குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள மேன்மைதகு மைத்திரிபால சிறிசேனா ஆகிய உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் எதைச் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என நான் சொல்லத் தேவையில்லை. நாட்டில் சகல துறைகளிலும், பல்வேறு பிரச்சினைகள் உண்டு. உங்களை எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிகச்சிக்கலானவை என்பதால் அனுபவசாலிகள் பலரின் உதவி உங்களுக்குத் தேவை. உங்களின் பிரதம மந்திரியாக வரஇருப்பவர் மிக நல்ல அனுபவமுடையவர். ஆகவே அவரோடு இணைந்து தங்களுடைய பணிகளை மேற்கொண்டால் மிக்க பயனுடையதாக இருக்கும்.

 

நீங்கள் செயற்பட வழிகாட்டியாக உங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் இருக்கிறது. செயற்படுத்தி உதவ ஓர் அணியும் உங்களிடம் உண்டு. நம்நாட்டின் மிகப்பெரிய சாபமானது பல்வேறு இனமத குழுக்கள் மத்தியிலேயே உண்டு. மிக்க அவசரமான விடயங்களில் முதல் கவனம் செலுத்தி நாட்டை சமாதானத்துக்கும் அமைதிக்கும் இட்டுச் செல்லுங்கள். அத்துடன் தாமதமின்று வறுமையையும் போக்குங்கள்.

 

தங்களுக்கு முன் இப்பதவியை வகித்தவர் அபிவிருத்திக்கு ஆற்றிய பெரும்பணியை நினைவுகூர்ந்து நானும் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கானோரும் எமது பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறீர்கள் என்பதைப் பார்க்க ஆவலாயுள்ளேன். ஏதிர்பாராமல் உங்கள்மீது திணிக்கப்பட்டுள்ள கௌரவமிக்க இப்பதவியில் வெற்றிகரமாக பல ஆண்டுகள் இயங்கவேண்டுமென உங்களை வாழ்த்துகிறேன்.

Web Design by Srilanka Muslims Web Team