புதிய பரீட்சை கேள்விகள் » Sri Lanka Muslim

புதிய பரீட்சை கேள்விகள்

like

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


இனி வரும் காலங்களில்
எக்ஸாம் பேப்பர்களில்
இது போன்ற கேள்விகளும்
பொதுவாக வரக் கூடும்.

ஒரு லைக் போட்டால்
இரு லைக் கிடைக்குமெனின்
இரு நூறு லைக் கிடைக்க
எத்தனை லைக் போட வேண்டும்?

காசியப்பன் டைம்லைனில்
காணப் படும் ஷெல்பிகளை
பூசி வரைந்த ஓவியர் யார்
புதுமை மிகு சிகிரியாவில்.

ஹறம் சரீபில் இருக்கும் போது
கமரா போண் ஓப் ஆனால்
வரும் நன்மை குறையுமா?
வரலாம் இஸ்லாம் பேப்பரில்!

எந்த ஒரு போஸ்டுக்கும்
எதிராகவும் சமமாகவும்
வந்து விழும் போஸ்டுகளை
வரைபுடன் விளக்குக.

பாண்டவர்கள் ஐவரும்
பயன் படுத்தி வந்ததாக
சான்றுகள் கிடைத்துள்ள
Chat குறூப்பின் பெயரென்ன?

இப்படியாய் கேள்விகள்
ஏராளம் வரலாம்
தப்பில்லா பதில்களும்
தாராளமாய் உண்டு

Web Design by The Design Lanka