புதிய பீடாதிபதியாக கலாநிதி ஹாறுன்! - Sri Lanka Muslim
Contributors

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக இரசாயனவியல் துறையின் தலைவர் கலாநிதி முகம்மட் ஹனிபா  ஹாறுன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில், பிரயோக விஞ்ஞான பீடத்தின் கேட்போர் கூடத்தில்  2022.08.03 அன்று இடம்பெற்ற விஷேட ஒன்றுகூடலின் போதே கலாநிதி எம். எச். ஹாறுன்  புதிய பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹாறுன்,  ஆரம்பக் கல்வியை பொத்துவில் மஹா வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக் கல்வியை கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியிலும் கற்றிருந்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று தேர்ச்சி பெற்று, பின்னர் கலாநிதி பட்டத்துக்காக இலங்கை, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில் கற்றிருந்தார்.

Web Design by Srilanka Muslims Web Team