புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் இரு பிக்கு உட்பட 11 பேர் கைது - Sri Lanka Muslim

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் இரு பிக்கு உட்பட 11 பேர் கைது

Contributors

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் காவற்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் தோண்டப்படுவதாக காவற்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு சென்ற காவற்துறையினர் நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த இரு பிக்குமார் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன், 2 கார்கள் மற்றும் முச்சக்கர வண்டியையும் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team