புத்தரின் விகாரப்படுத்தப்பட்ட உருவம் பொறிக்கப்பட்ட கைத்துவாய்கள் மீட்பு - Sri Lanka Muslim

புத்தரின் விகாரப்படுத்தப்பட்ட உருவம் பொறிக்கப்பட்ட கைத்துவாய்கள் மீட்பு

Contributors

கடவத்தை – நவகமுவ பத்தினி அம்மன் ஆலயத்தில் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் விட்டுச் செல்லப்பட்ட புத்தரின் விகாரப்படுத்தப்பட்ட உருவம் பொறிக்கப்பட்ட கடதாசி மற்றும் கைத்துவாய்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் இவற்றை மீட்டதாக, தேவாலயத்தின் பிரதான குரு மாரலந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் நாட்டு நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த கைத்துவாய்கள் இலங்கைக்கு எவ்வாறு எடுத்து வரப்பட்டது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஏற்கனவே புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.ஆடை, மாமிச உற்பத்திகள், மற்றும் பாதணிகள் போன்றவை இவ்வாறு தயாரிக்கப்பட்டிருந்தன.

உலகில் பௌத்த மதம் பரவுவதை தடுக்கும் நோக்கில் இவ்வாறான உத்திகள் கையாளப்பட்டு வருவதாக இலங்கை பௌத்த சாசன அமைச்சு தெரிவித்துள்ளது.மதங்களை அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டித்தக்கதாகும்.tc

Web Design by Srilanka Muslims Web Team