புத்தர் படத்தை பயன்படுத்தி கலண்டர் அச்சடித்த இறைச்சிக்கடை உரிமையாளர் கைது - Sri Lanka Muslim

புத்தர் படத்தை பயன்படுத்தி கலண்டர் அச்சடித்த இறைச்சிக்கடை உரிமையாளர் கைது

Contributors

புத்தரின் உருவப் படத்தைப் பயன்படுத்தி கலண்டர் அச்சடித்த இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொனராகல் பிரதேசத்தில் பன்றி, கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனையாளர் ஒருவர் 2014ம் ஆண்டுக்காக நாட்காட்டி அச்சிட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

தலதா மாளிகை மற்றும் கௌதம புத்தரின் உருவப்படங்கள் இந்தக் கலண்டர்களில் காணப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு கலண்டர் வழங்கிய கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கலண்டர்களையம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கலண்டர் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்த இறைச்சிக்கடை உரிமையாளர் ஓர் பௌத்தர் எனவும், அவரது மனைவி வேறும் மதத்தைச் சார்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மொனராகல் பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team