புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரி விரிவுரையாளர் M.I. அபுல் ஹுதா (பாகவி) இன்று காலமானார் » Sri Lanka Muslim

புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரி விரிவுரையாளர் M.I. அபுல் ஹுதா (பாகவி) இன்று காலமானார்

hu

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அ(z)ஸ்ஹான் ஹனீபா, அஸ்லாம்  கத்தார்


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

புத்தளம், ஆளுமை நிறைந்த பண்பாடுள்ள இஸ்லாமிய அழைப்புப் பணியில் திறம்பட கால்பதித்த ஓர் சிறந்த ஆலிமை இழந்துள்ளது

அஷ்ஷைக் அபுல் ஹுதா பாகவீ அவர்களது இழப்பு ஓர் பேரிழப்பாகும், புத்தளம் காஸிமிய்யா, மற்றும் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிகளது விரிவுரையாளராக கடமையாற்றி பல மாணாக்களை உருவாக்கிய சிறந்த ஆசான், தனது திறமையான பேச்சால் இஸ்லாத்தின் பெயரில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி விழிப்பூட்டி அவற்றை களை பிடுங்குவதில் முன்னின்ற மாபெரும் மேதை…

இத்தகைய அருமையான ஆசானை,ஆலிமை, அழைப்பாளரை இழப்பது ஈடு செய்யமுடியாத ஒன்றெனில் மிகையாகாது.

வல்லவன் அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொண்டு, அவர்களது பாவங்களை மன்னித்து எவ்வித கேள்வி கணக்கின்றி உயர்ந்த ஜென்னதுல் பிர்தவ்ஸ் நுழையும் பேற்றையும் கொடுத்தருள்வானாக

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس.

Web Design by The Design Lanka