புத்தளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு மத்ரசா ஆசிரியர்கள் யார்..? - Sri Lanka Muslim

புத்தளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு மத்ரசா ஆசிரியர்கள் யார்..?

Contributors

புத்தளம் பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்ட மத்ரசா பாடசாலையொன்றில் சேவையாற்றிய இரண்டு ஆசிரியர்கள், நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. 
26 மற்றும் 27 வயதுடைய சிலாபம் மற்றும் மதுரங்குளிய பிரதேசங்களை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 
குறித்த இருவரும் சேவையாற்றி வந்த மத்ரசா பாடசாலைக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹசீம் வருகை தந்து மாணவர்களுக்கு போதனையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 
அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team