புத்தளம் மத்ரசாவில் கடமையாற்றும் மேலும் இருவர் தற்போது கைது..! - Sri Lanka Muslim

புத்தளம் மத்ரசாவில் கடமையாற்றும் மேலும் இருவர் தற்போது கைது..!

Contributors

புத்தளத்தில் மதரசா பாடசாலையொன்றில் கடமையாற்றிய இருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளை சேர்ந்த 26, 27 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான், குறித்த மதரசா பாடசாலைக்கு சென்று போதனைகளை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவை பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team