புத்தளம் வாக்குச்சீட்டு வழக்கு முடிவடைந்தது » Sri Lanka Muslim

புத்தளம் வாக்குச்சீட்டு வழக்கு முடிவடைந்தது

ballotbox

Contributors

ballotbox

 

 

வடமேல் மாகாண சபைக்காக அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் கணக்கெடுக்கப்பட்டதன் பின்னர் சென். அன்றூ வித்தியாலயத்தில் இரண்டு இடங்களிலிருந்து வாக்குச்சீட்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை முடிவடைந்துள்ளது என்று புத்தளம் பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பில் எவ்விதமான முறைக்கேடுகளும் இடம்பெறவில்லை என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு  புதன்கிழமை (2013-10-09) கொண்டுவந்தனர். இதனையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு அறிவித்தார். இந்நிலையில், மீட்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு சீட்டுக்களை புத்தளம் உதவி தேர்தல் அதிகாரியிடம் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புத்தளம் சென். அன்றூ வித்தியாலயத்திலிருந்து இரண்டு சந்தர்ப்பங்களில் மீட்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதியில் 6386 வாக்குச்சீட்டுகள் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Web Design by The Design Lanka