புத்தாண்டு கொண்டாட்டம்! 1067 கார்கள் தீயிட்டு எரிப்பு - Sri Lanka Muslim

புத்தாண்டு கொண்டாட்டம்! 1067 கார்கள் தீயிட்டு எரிப்பு

Contributors

2014ம் ஆண்டை வரவேற்பதாக பிரான்சில் 1067 கார்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் புத்தாண்டுக்கு முதல் நாள் அதாவது டிசம்பர் 31ம் திகதி, இரவில் பழைய கார்களை எரித்து அழிக்கும் சம்பவம் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

இதன்படி இந்த ஆண்டு மட்டும் சுமார் 1067 கார்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் மானுவல் வால்ஸ் கூறுகையில், எதிரிகளை பழி வாங்கும் நோக்கில் அவர்கள் காரை புத்தாண்டு உற்சாகத்தை சாக்காக வைத்து எரிப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இது போன்ற சம்பவம் இந்த ஆண்டு 10 சதவிகிதம் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொண்டாட்டங்கள் நடக்கும் விபரீதங்களை தவிர்ப்பதற்காக 53 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

எனினும் வன்முறை சம்பவங்களில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team