புத்தாண்டை முன்னிட்டு அதிரடி விலை குறைப்பு! - Sri Lanka Muslim

புத்தாண்டை முன்னிட்டு அதிரடி விலை குறைப்பு!

Contributors

அரசாங்கம் எதிர்வரும் புத்தாண்டு பருவத்தில் பல பொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானித்துள்ளது.

நாட்டின் அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம் புதிய விலைகளின் கீழ் குறித்த பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்று (01) குறித்த அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, சந்தையில் தற்போது 150 முதல் 165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சிகப்பு சீனி ஒரு கிலோவினை 115 ரூபாவுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வணிக கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற 100 கிராம் தேயிலை தூளின் விலை 135 ஆக காணப்படும் நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் 100 கிராம் தேயிலைத் தூள் 95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

தற்போது 550 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லி லீற்றர் சோயா எண்ணெயை 310 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

50 மில்லி லீற்றர் கை கழுவும் திரவம் 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

SLS சான்றிதழ் கொண்ட முகக்கவசத்தின் புதிய விலை ரூ .14 ஆகும். என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team