புத்தாண்டை முன்னிட்டு 1000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி - Sri Lanka Muslim

புத்தாண்டை முன்னிட்டு 1000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி

Contributors

அத்தியவசியப் பொருட்கள் 12 உள்ளடங்கலான நிவாரணப் பொதியொன்றை ரூபா ஆயிரம் பெறுமதிக்கு சதொச விற்பனை நிலையத்தினூடாக இன்று முதல் பொதுமக்கள் கொள்வனவு செய்ய முடியும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு புத்தாண்டுக் கொடுப்பனவொன்றாக இந்த வேலைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் குறித்த நிவாரணப் பொதியில் பச்சை அரிசி ஒரு கிலோ கிராம், சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராம், நாட்டரிசி ஒரு கிலோ கிராம், வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம், பருப்பு ஒரு கிலோ கிராம் மற்றும் கோதுமை மா ஒரு கிலோ கிராமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உப்பு ஒரு பாக்கெட், நெத்தலி 250 கிராம், சோயா மீட் ஒரு பக்கெட், துண்டு மிளகாய் ஒரு பக்கெட், தேயிலை ஒரு பக்கெட் மற்றும் முகக் கவசமொன்றும் இப்பொதியினுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team