புனித பிரதேசம் என்ற பெயரில் அபகரிக்கப்படும் மாதம்பை முஸ்லிம்களின் பூர்வீகம் - Sri Lanka Muslim

புனித பிரதேசம் என்ற பெயரில் அபகரிக்கப்படும் மாதம்பை முஸ்லிம்களின் பூர்வீகம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

நன்றி – இணையம், மாற்றங்களுடன் அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.


மாதம்பை பழைய நகர் என்பது நெடுங்காலமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் பூர்வீக பூமியாகும் கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் அமையப் பெற்றிருக்கும் இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் முற்காலம் தொட்டு வாழ்ந்து வந்திருப்பினும், இவர்களிடம் 1886 ஆம் ஆண்டு தொடக்கம் இருந்தமைக்கான அத்தாட்சியாக காணி உறுதிகள் காணப்படுகின்றன.

இந்த பிரதேசத்தின் தேவாலயத்துக்கு பக்கத்திலிருக்கும் குறித்த பகுதியை புனிதப் பிரதேசமாக்கும் திட்டம் 1991 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது மாதம்பை தேவாலயத்துக்கு பக்கத்தில் 24 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் வீடுகள், வியாபார நிலையங்கள் உள்ள பிரதேசமும், தேவாலயத்தின் புனித பிரதேச திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இப்பிரச்சினை காரணமாக இப்பிரதேசத்தில் மீண்டும் அளவீட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க இடமளிக்கப்படுமாயின் அதனை வைத்து அடுத்த கட்டமாக 24 வீடுகளை அபகரித்து தேவாலயத்தின் விஸ்தரிப்பு இடம்பெறும் என பிரதேச மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

இதில் குறித்து சொல்லப்பட வேண்டிய அம்சம் என்னவெனில், தேவாலயத்தைச் சூழவுள்ள வீடுகளில், முஸ்லிம்களின் வீடுகளைப் போலவே, சிங்கள சமூகத்தவர்களின் வீடுகளும் அமையப் பெற்றுள்ளன. இருப்பினும், ஏற்கனவே, வர்த்தமானியில் புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வரைபடத்தில், எந்தவொரு சிங்கள சமூகத்தவர்களின் வீடுகளும் உட்படுத்தப்படவில்லை. முஸ்லிம்களின் வீடுகள் மாத்திரமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

தமக்குச் சொந்தமான நிலத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு முடியாத நிலையில் உள்ள மாதம்பை முஸ்லிம்களின் இப்பிரச்சினையை தகுதிவாய்ந்தவர்களிடம் கொண்டு செல்வதும் தீர்த்துவைக்கப் போராடுவதும் அதற்காக தம்மால் முடியுமான வழியில் உழைப்பதும் உதவுவதும் அனைத்து இலங்கை வாழ் முஸ்லிம்களினதும் பொறுப்பாகும்.

Web Design by Srilanka Muslims Web Team