புனித ஹரம் ஷரீபின் உள்ளே ஜனாஸாக்களை எடுத்து வருவதற்கான புதிய வண்டி அறிமுகம் » Sri Lanka Muslim

புனித ஹரம் ஷரீபின் உள்ளே ஜனாஸாக்களை எடுத்து வருவதற்கான புதிய வண்டி அறிமுகம்

a66

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-மெளலவி.அல்ஹாஜ்.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி-


புனித ஹரம் ஷரீபின் உள்ளே ஜனாஸாக்களை எடுத்து வருவதற்கான புதிய வண்டி ஒன்றை அறிமுகம் செய்ய, இரு ஹரம்களின் பராமரிப்பு சபை நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது.

இரு ஹரம்களின் தலைமை நிருவாகி கலாநிதி. அஷ்.ஷெய்க்.அப்துர் ரஹ்மான் ஸுதைஸ் ‘ஜனாஸாக்கள் ஹரம் ஷரீபின் முற்றத்தில் இருந்து ஜனாஸா தொழுகை நடத்தும் இடத்திற்கு புதிய கொண்டு வருவதற்கான வண்டி அறிமுகம் பற்றி’விவரித்தார்.

மேலும் இது பற்றி தெளிவுபடுத்திய இரு ஹரம்களின் அலுவலகர்களின் தலைமை அதிகாரி, அல்உஸ்தாத். முஹம்மத் பின் ஹஸன் பாத்தி: “இந்த வண்டிகள் மஸ்ஜிதுல் ஹரமிற்குள் ஜனாஸாக்களை எடுத்து வருவதற்கென்றே தாயார்படுத்தப்பட்டுள்ளது. இவை எதிர்வரும் காலங்களில் செயல்படுத்தப்படவிருக்கின்றது.

இதை இரு ஹரம்களின் பணிவிடையாளர் மன்னர் ஸல்மான் அவர்களும் பெரிதும் வரவேற்கின்றார்கள்.

எதிர்வரும் காலங்களில் மஸ்ஜிதுன் நபவிய்யிலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என குறிப்பிட்டார்.
நன்றி: ஷுஊனில் ஹரமைன்.

a a-jpg2-jpg3

Web Design by The Design Lanka