புரூணை பல்கலைக்கழகங்கம் ; புலைமைப்பரிசில்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது - Sri Lanka Muslim

புரூணை பல்கலைக்கழகங்கம் ; புலைமைப்பரிசில்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

Contributors

 

Brunei Darussalam Government Scholarships to Foreign Students

புரூணை பல்கலைக்கழகங்களில் பல்வேறு கற்கைநெறிகளுக்காக அந்நாட்டு அரசினால் ஆண்டு தோறும் ஏராளமான புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

இவை மருத்துவ, விஞ்ஞான, வர்த்தக, முகாமைத்துவ, கலைத்துறைகளில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான கற்கைநெறிகளுக்காக வழங்கப்படுகின்றன. இப்புலமைப்பரிசில்களைப் பெறத் தகுதிபெறுபவர்களுக்கு பாடநெறிக் கட்டணம், தங்குமிடம், விமானக் கட்டணம் என்பன இலவசமாக வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு பல்லாயிரம் ரூபாய் பெறுமதியான மாதந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.

எனினும் இவை பற்றிய போதிய தெளிவின்மையால் எமதுசமூகத்திலிருந்து ஒரு சிலரே இவற்றுக்கு விண்ணப்பிக்கின்றனர். அதிலும் முறையாக விண்ணப்பபடிவங்கள் பூர்த்தி செய்யாததன் காரணமாக அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

இவ்வாண்டும் புரூணை தாருஸ்ஸலாம் அரசினால் பல்வேறுபட்ட Diploma, Degree, Masters, PhD கற்கைநெறிகளுக்கான புலமைபரிசில்ககள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இவற்றில், 18-25 வயதானவர்களுக்கு Diploma, Degree பாடநெறிகளுக்கும் 35 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு Masters, PhD பாடநெறிகளுக்கும் விண்ணாபிக்கலாம்.

விண்ணப்ப முடிவுத்திகதி – 17/01/2014

இது பற்றிய மேலதிக விபரங்கள்

http://www.mofat.gov.bn/index.php/announcement எனும் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

 

Web Design by Srilanka Muslims Web Team