புர்ஜ் கலிபா கட்டடத்தின் உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த புகைப்படக்காரர் » Sri Lanka Muslim

புர்ஜ் கலிபா கட்டடத்தின் உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த புகைப்படக்காரர்

burj kaleepa

Contributors
author image

World News Editorial Team

இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஒருவர் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவின் மீது ஏறி செல்ஃபி எடுத்துள்ளார்.

 

செல்ஃபி எடுக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிகமாக செல்ஃபி எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏதோ பிரச்சனை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை யாரும் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை.

 

இந்நிலையில் தான் இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்படக்காரரான ஜெரால்ட் டோனவன்(47) என்பவருக்கு உலகின் உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிபா மீது ஏறி செல்ஃபி எடுக்கும் ஆசை ஏற்பட்டது.

 

டோனவன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் பணியாற்றி வருகிறார். அவர் 2 ஆயிரத்து 723 அடி உயரமுள்ள புர்ஜ் கலிபாவுக்கு சென்று அதன் உச்சியில் ஏறி செல்ஃபி எடுத்தார்.

 

அவர் துபாயின் உயரமான கட்டிடங்கள் பல தெரியும்படி செல்ஃபி எடுத்துள்ளார். இது தான் உலகின் உயரமான இடத்தில் எடுக்கப்பட்ட முதல் செல்ஃபி என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka