புறவி சூறாவளி தாக்கம் காரணமாக உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி வைப்பு..! - Sri Lanka Muslim

புறவி சூறாவளி தாக்கம் காரணமாக உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி வைப்பு..!

Contributors

எப். முபாரக்

அண்மையி்ல் ஏற்பட்ட புறவி சூறாவளி தாக்கம் காரணமாக குறித்த சூறாவளி தாக்கம் ஏற்பட்டு இரண்டு தினங்களில் கடலிற்கு மீன் பிடிக்க சென்ற திருகோணமலையை சேர்ந்த மூவருள் ஒருவரான எதிரவீர ஜயசூரிய ஆருகட்டு பட்டபந்திகே ஜானக என்னும் 45 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தை படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினரிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட  1 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு இன்று(25) அவரது குடும்பத்தினரிற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான கபில நுவன் அத்துக்கோராளவினால்  மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, திருகோணமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் டபிள்யு.ஏ.ஆர்.சேனாரத்ன உட்பட பயனாளி குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team