புலிகள் : கொழும்பை சென்று தாக்கக் கூடிய 2௦ ஏவுகணைகளை வைத்திருந்தார்கள்- புதிய ராணுவ ஆய்வு! - Sri Lanka Muslim

புலிகள் : கொழும்பை சென்று தாக்கக் கூடிய 2௦ ஏவுகணைகளை வைத்திருந்தார்கள்- புதிய ராணுவ ஆய்வு!

Contributors

புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், அதாவது சாமாதான காலப்பகுதியின் ஆரம்ப காலகட்டங்களில் புலிகள்இலங்கை இராணுவத்தினருடன் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக தமது இராணுவ நடவடிக்கைகளை புலிகள் மட்டுப்படுத்தி வைத்து இருந்தனர்

எனவே இந்த காலகட்டங்களில் புலிகள் தமது இராணுவ பலத்தை மேலும் அதிகப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தனர் என்று கூறப்படுகின்றது.

இந்தக் காலகட்டத்தில் தான் புலிகள் தமது விமானகள் மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் போன்ற நாவீன ஆயுதங்கள் தாயாரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் வெற்றி அடைந்து இருந்தனர் என்று கூறப்படுகின்றது.

தற்போது இதில் இன்னொரு அங்கமாக சட்டலைட் வழிநடத்தலில் மூலம் புலிகள் கொழும்பு வரைக்கும் சென்று தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணைகளை தாயரிப்பதில் வெற்றி அடிந்த்து இருந்ததாகவும் அதில் 20முதல் 35 வரையான ஏவுகணைகளை அவர்கள் தயாரித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆதாரம்

அவ்வாறு தாயாரித்த ஏவுகணைகளை அவர்கள் ஈழத்தில் தமது கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பல்வேறு இடங்களில் மீள எடுத்துக்கொள்ளும் வகையில் புதைத்து வைத்தனர் என்று கூறப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் இறுதி நாட்களில் புலிகள் தமது தீவீரமான வழிந்த தாக்குதல்களை எதுவும் நடத்தவில்லை, மாறாக புலிகள் இராணுவத்தினருக்கு எதிரான தற்காப்பு, மற்றும் முறியடிப்பு வகை சமர்களையே புலிகள் மேற்கொண்டனர்.

இதில் இருந்து புலிகளின் தலைமைக்கு வேறு ஏதோ ஒரு மாற்று திட்டம் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்றும், அந்த திட்டத்தை செயற்படுத்தும் வரைக்கும் இராணுவத்தினரை தடுத்து நிறுத்தி திசை திருப்பவே இந்த மாதிரியான தற்காப்பு சமர்களை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பின்னர் இறுதியாக புலிகள் தமது திட்டத்தில் வெற்றி அடைந்த நிலையிலேயே அவர்கள் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறி வேறு ஏதோ ஒரு பாதிகாப்பன இடத்துக்கு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.(bnws)

 

Web Design by Srilanka Muslims Web Team