புல்மோட்டையில் மினி சூறாவளி: வீடுகள் பல சேதம் - Sri Lanka Muslim

புல்மோட்டையில் மினி சூறாவளி: வீடுகள் பல சேதம்

Contributors

நாட்டில் நிலவுகின்ற தொடர்ச்சியான மழை மற்றும் அசாதாரண காலநிலை  காரணமாக புல்மோட்டையில் மினி சூறாவளி நேற்றிரவு வீசியுள்ளது. இதனால்  ஜின்னாபுரம் பகுதியில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வீட்டின் கூரைகள் காற்றில் அள்ளுண்டதுடன் வீட்டினுள் இருந்த பெறுமதியான பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விஜயம் செய்த  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  அன்வர் அப்பகுதிக்கு பொறுப்பாகவுள்ள கிராம சேவகர் சுபைர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளையும் சேதங்களை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுக்குமாறு உரிய தரப்பினருக்கு பணித்தார்.(tm)

 

51342

Web Design by Srilanka Muslims Web Team