புல்மோட்டை பிரதேச மக்களின் காணி அபகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல் - Sri Lanka Muslim

புல்மோட்டை பிரதேச மக்களின் காணி அபகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Contributors

-கி.மா.ச. உறுப்பினரின் ஊடகப் பிரிவு-

புல்மோட்டை பட்டிக்குடா பிரதேசத்துக்கு பிரதேச செயலாளருடன் மாவட்ட பா.உ .தௌபீக் திடீர் விஜயம்: கடந்த வாரம் புல்மோட்டை பட்டிக்குடா பிரதேசத்தில் பொதுமக்கள் குடியிருந்து தோட்டப்பயிர்ச் செய்கைகள் பண்ணப்பட்ட காணிக்குள் கடற்படையினரால் தமது பிரதேசமென பெயர்ப்பலகை இடப்பட்டு குடியிருப்புகள் சேதமாக்கப்பட்ட நிலையில் அப்பிரதேசத்தில் பதட்ட நிலை ஏற்பட்டது இதனை பார்வையிடுவதற்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தொளபீக் விஜயம் செய்தார் .

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின் வேண்டுகோளுக்கினங்க பாராளுமன்ற உறுப்பினர் அங்கு விஜயம் செய்தார் .

இவர்  குச்சவெளி பிரதேச செயலாளருடன் குறித்த பகுதியை பார்வையிடுவதற்காக புல்மோட்டை பிரதேசதக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் மிஸ்பாஹுல் ஹுதா பள்ளிவாயலில் மா.சபை.உறுப்பினர் அன்வரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தின்போது தமது கருத்துக்ளையும் எடுத்து விளக்கியதோடு தமக்கு நீண்ட காலமாக காணி அனுமதிப்பத்திரம் குறித்த பகுதியிலுள்ளவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் இதற்காக தாம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டதுடன் தொடர்ச்சியாக எமது பிரதேசத்தில் நிகழும் இந்நடவடிக்கையால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் கடற்படையினராலே அதிகம் நாளுக்கு நாள் காணிகள் பலவந்தமாக பிடிக்கப்படுகின்றது மாத்திரமல்லாமல் இங்குள்ள கடற்படையினர்  எமது பிரதேசத்தில் சர்வதிகாரிகள் போன்று நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்நிகழ்வில் பிரதேசத்திற்கான கிராம சேவையாளர் திரு சுபைர் மற்றும் ஜம்மியத்துல் உலமா சபையினர் மற்றும் பள்ளிவாயல்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்

குறித்த பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் உரையாற்றுகையில்: தான் பல முறை இதுவிடயமாக உரிய அதிகாரிகளுக்கு மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் மாகாண சபைக்கு கொண்டு சென்றும் அத்துடன் உரிய அதிகாரிகளின் தலைமையில் பல தடவைகள் இது பேசப்பட்டுள்ளதாகவும் ஆனால் எந்தவித தீர்வுமில்லாமல் இன்று நீதி மன்றம்வரை இந்நடவடிக்கை கொண்டு செலப்பட்டுள்ளதாகவும் என்று கூறிய அதேவேளை இதற்கு சுமூகமான தீர்வு உரிய காணி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு தீர்வு பெற்றுத்தரவேண்டும் என்றும் மா.சபை.உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உரையாற்றுகையில் : தனக்கு இது விடயமாக மா.சபை.உறுப்பினர்; அன்வர்; பல தடவை எடுத்துக்கூறியுள்ளதாகவும் அதன் நிமித்தம் தான் பல தடவை உரிய அதிகாரிகள் மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவ்வாறு கட்சியின் தலைவர்; நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு சென்று தற்காலிக தீர்வு பெறப்பட்டதாகவும் உண்மையில் நிரந்தர தீர்;வு பெறப்படவேண்டும் என்ற அடிப்படையில் தான் விரைவாக பாதுகாப்பு  அமைச்சு மற்றும் காணி அமைச்சர்ஆகியோரை குறித்த பிரதேசத்துக்கு அழைத்து உண்மை நிலைகள் காண்பிக்கப்பட்டு அதனூடாக உரிய தீ அமைச்சவினை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்ததுடன்

குச்சவெளி பிரதேச சபையின் உப தவிசாள அமைச்ச தௌபீக் உரையாற்றுகையில் : தானும் புல்மோட்டை உலமா சபை மற்றும் சில அமைச்ச; புல்மோட்டை கடற்படை முகாமுக்கு கடந்த 23.12.2013ம் திகதி காலை 10 மணியளவில் இடம்பெற்ற கூட்டத்தில் தாம் மற்றும் உமா சபையின அமைச்ச கிராம மக்களின் பூர்வீக குடிகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவ அமைச்சகள் மீளவும் அப்பிரதேசத்தை நோக்கி நகருகின்றவேளையிளேயே இவ்வாறு பிரச்சினை உருவாகின்றது என்று தெளிவுபடுத்தியபோது உண்மையில் இக்கடற்படை முகாமுக்கு இன்னும் 193 ஏக்கர; காணி மேலதிமாக தேவைப்படுகின்றது ஏனெனில் கடற்படையினருக்குரிய விடுதிகள் பல அமைக்கப்படவுள்ளதாகவும் மேலும் அதற்கான இதர தேவைகளான பாடசாலை மற்றும் வைத்தியாசாலை போன்றனவும்  அமைக்கப்பட வேண்டும் என்பதுடன் தற்போது பௌத்த விகாரைக்கான ஏற்பாடுகள் புத்தர்சிலை வைத்து ஆரம்பிக்கப்படுள்ளது என்பதுடன் விரைவாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மேற்குறித்த திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் புல்மோட்டை கடற்படை பொறுப்பதிகாரி சுரேஸ்டிசில்வா தெரிவித்தார்  எனக் கூறினார்.

குச்சவெளி பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன் பேசுகையில்: உண்மையில் இங்குள்ள மக்களின் நிலைமையை நான் நன்கு அறிவேன் அவர்களின் வாழ்வாதாரம் என்ன என்பதையும் அவர்களுக்கான தேவை என்ன என்பதைனையும் நான் நன்கு உணர்கின்றேன் மேலும் இவை அனைத்திற்கு மேலாக புல்மோட்டை காணிப்பிரச்சினை என்பது மிக முக்கியமானதொhரு அம்சமாகும்.

ஏனெனில் கடந்த  முப்பது வருட காலங்களில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் புவியியல் ரீதியான போக்குவரத்துமே இதற்கு காரணங்களாகும் இதனாலேயே இங்குள்ள மக்களுக்கு அவர்களின் சொந்த பூர்வீக இடங்களுக்கான உத்தரவுப்பத்திரங்கள் கிடைக்கவில்லை ஆகவேதான் இன்று அவர்களின் காணிகளுக்கு செல்ல முடியாமல் பெருங்காடு வளர்ந்து காணப்படுவதும் அதற்கு தற்போது எங்களால் காடுகளாக இருப்பவற்றுக்கு எவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்குவது என்பதும் ஒரு சிக்கல் நிலையை தோற்றுவித்திருக்கின்றது. ஆனால் மக்களின் கோரிக்கை நியாயமானது அவற்றை ஒருபோதும் நிராகரிக்கமுடியாது இருப்பினும் பிரதேச செயலாளர்களுக்கு காணிக்கான முழு அதிகாரிகமும் வழங்கப்படவில்லை ஆகவே இப்பிரச்சினை தொடர்பாக உயர் மட்ட ரீதியாக கலந்தாலோசித்து முடிவுகள் எட்டப்படவேண்டும் எனவும்.

இருப்பினும் 12000 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது அதில் 8000ம் விண்ணப்பம் புல்மோட்டைப்பிரதேசத்திற்குரியது இவைகள் விசாரணை செய்யப்பட்டு வழங்கப்படுமானால் நான் நினைக்கின்றேன் புல்மோட்டை பிரதேச பிரச்சினை ஓரளவு தீர்க்கப்படலாமென்பதுடன் இவற்றுக்கிடையே தற்போது 2013/1 சுற்று நிருபத்தின்படி இடம்பெயர்ந்தவர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கான சுற்றுநிருபத்தினை அனுப்பி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது ஆகவேதான் ஏற்கெனவே வழங்கப்பட்ட விண்ணப்ப வேலைகள் பூர்த்தி செய்து அவற்றை வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆகவே இதனை கௌரவ பா.ம உறுப்பினர் கவனத்திலெடுத்து உரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஏற்கெனவே கோரப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக விரைவில் கவனமெடுக்க நவடடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டி தனது உரையை நிறைவு செய்தார்.

1235

Web Design by Srilanka Muslims Web Team