பெண்களை மயக்கும் மருதாணியின் மகத்துவங்கள் - Sri Lanka Muslim

பெண்களை மயக்கும் மருதாணியின் மகத்துவங்கள்

Contributors

இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று.

ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது, அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல்வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். ஏனெனில் இதில் எண்ணற்ற பலன்கள் நிறைந்துள்ளன.

இதன் இலைகள் கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது.

குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை

மருதாணியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேஸ்ட் வடிவில் இருக்கும் மருதாணி இலைகளை உடல் சூட்டை தணிக்கவும் பயன்படுத்தலாம்.

இரவு தூங்கும் போது மருதாணி பேஸ்டை பாதத்தில் தடவினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். இது சிறப்பாக செயல்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

maruthani_002

 

தலைமுடி

அனைத்து வகை தலைமுடி பிரச்சனைகளுக்கும் பவுடர் அல்லது பேஸ்ட் வடிவில் உள்ள மருதானை இலைகளை பயன்படுத்தலாம்.

வாரம் ஒரு முறை இந்த பேஸ்டை தலை முடியில் தடவினால் பொடுகு குறைந்து, தலைமுடியை மென்மையாக்கி, பளபளப்பை உண்டாக்கும்.

மேலும் நரை முடியை மறைப்பதற்காகவும் அதனை பயன்படுத்தலாம்.

maruthani_003

 

வலி நிவாரணி

குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மையுள்ள மருதாணியை தலை வலி நிவாரணியாகவும் பயன்படுத்தலாம்.

மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர் அல்லது பேஸ்டை நெத்தியில் தடவினால் தீவிரமான தலைவலியாக இருந்தாலும் கூட குறைந்து விடும்.

அதனை சீராக பயன்படுத்தினால் மைக்ரைன் பிரச்சனைக்கும் நிவாரணியாக விளங்கும்.

ஆஸ்பிரின் மாத்திரைக்கு சிறந்த மாற்றாக விளங்குகிறது மருதாணி.

வீக்கத்தை கட்டுப்படுத்த அதனை அழற்சி நீக்கி பொருளாகவும் பயன்படுத்தலாம்.

இதன் இலைகளை பேஸ்டாக மாற்றி வீங்கிய பகுதியில் தடவி, அது காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள்.

பின் அதனை கழுவி விடுங்கள், வீக்கம் முதுவாக வற்ற ஆரம்பிக்கும்.

இதேபோன்று தீக்காயம் ஏற்பட்டாலும் மருதாணி இலைகளை தடவினால் வலி வெகுவாக குறையும்.

maruthani_004

 

தூக்கமின்மை

தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும்.

மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும்.

பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும், ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

Web Design by Srilanka Muslims Web Team