பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம்-படங்கள். - Sri Lanka Muslim

பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம்-படங்கள்.

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளை நிறுத்துவோம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு நகரில் 23-09-2014 இன்று செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்;ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

 

மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவத்திற்கான பெண்கள் கூட்டமைப்பு ,மட்டக்களப்பு மாவட்ட மகா மகளீர் அமைப்பு,காத்தான்குடி -ஆய்விற்கும் மேம்பாட்டிற்றுமான மகளீர் ஒன்றியம்,ஷியாட் பவுன்டேஷன் ,சூறியா பெண்கள் அமைப்பு,காத்தான்குடி 164 ஏ மகளீர் சங்கம் உட்பட பல்வேறு மகளீர் சங்கங்கள் இவ்  ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பெண்கள் சிறுமிகள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம்,சீமாவுக்கு நியாயம் எங்கே,சட்டத்தரணிகளே கொலையாளிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம்,சீமாவுக்கு நடந்த கொடுமையை இன்னொரு குழந்தைக்கு நடப்பதை தடுக்க கொலையாளிக்கு அதியுயர் தண்டணையான மரண தண்டணையை வழங்குமாறு தயவுடன் வேண்டுகிறோம் .

 

வன்முறைகளற்ற வீடும் நாடும் வேண்டும்,பொறுப்புடைமையுள்ள ஆண்கள் வன்முறைகளை தடுக்க அணி திரள வேண்டும்,பெண்கள் சிறுமிகளை வன்முறைக்கு உட்படுத்தாத ஆண்களின் சமூகத்தை உருவாக்குவோம்,சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிக்கு உச்சபட்டச தண்டனை வேண்டும்,பெண் ஆசை கொண்ட விவேக பேய்களை முற்றாக ஒழிப்போம்,துரிதமான விசாரணை இடம்பெற வேண்டும்,பெண்மை உந்தன் தாய்க்கும் தானடா ? சிந்தித்து பார் போன்ற பல்வேறு தமிழ் ,ஆங்கில பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

 

இவ் ஆர்ப்பாட்டப் பேரணி மட்டக்களப்பு நகர் காந்தி சதுக்க பூங்காவிலிருந்து மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜூம்மா பள்ளிவாயல் வரை சென்று அங்கு சிறிது நேரம் பதாதைகளுடன் நின்றது.

 

இவ் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளான பெண்கள்,சிறுமிகள்,முதியவர்கள்,மகளீர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

 

44

 

45

 

46

 

47

 

48

 

49

 

50

 

51

Web Design by Srilanka Muslims Web Team