பெண்ணின் மூக்கு மற்றும் மேலுதட்டை சாப்பிட்ட எலி - Sri Lanka Muslim

பெண்ணின் மூக்கு மற்றும் மேலுதட்டை சாப்பிட்ட எலி

Contributors

குழந்­தை­யாக இருந்த போது எலி­களால் மூக்கும் மேல் உதடும் கடித்து குத­றப்­பட்ட யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு இல­வச பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்­சையை மேற்­கொண்டு அவ­ரது கோர­ம­டைந்த முகத்தை சீர்­ப­டுத்த சீன மருத்­து­வ­ம­னை­யொன்று முன்­வந்­துள்­ளது.

 

ஷாங்டொங் மாகா­ணத்தைச் சேர்ந்த ஸு சன்னி என்ற 23 வயது யுவ­திக்கே இவ்­வாறு இல­வச அறுவைச் சிகிச்சை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

 

சன்னி குழந்­தை­யாக இருந்த போது, அவ­ரது தாயார் உணவை பெறும் முக­மாக வீட்­டை­விட்டு சென்­றுள்ளார்.

 

இந்­நி­லையில், மன­நலம் பாதிக்­கப்­பட்­டி­ருந்த அவ­ரது தந்­தையும் வீட்டை விட்டு சென்­று­விட, பால­கி­யான அவர் 3 நாட்கள் வீட்டில் தனி­யாக இருந்­துள்ளார்.

 

இந்­நி­லையில், அவ­ரது மூக்­கையும் மேலு­தட்­டையும் அங்கு நட­மா­டிய எலிகள் இர­வோ­டி­ர­வாக கடித்துக் குத­றி­யுள்­ளன.

 

மூன்று நாட்கள் கழித்து வீடு திரும்­பிய தாயார், தனது மக­ளுக்கு நேர்ந்த கதியைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

 

எனினும், பணவச­தி­யற்ற அவர், தனது மக­ளுக்கு மருத்­துவ சிகிச்சை பெற முயற்­சிக்­க­வில்லை.

 

இந்­நி­லையில், தற்­போது சீனா­வி­லுள்ள கிங்டவோ பொஷி என்ற மருத்துவமனை சன்னிக்கு இலவச அறுவைச்சிகிச்சையை வழங்க முன்வந்துள்ளது.(vk)

 

Tags:

 

Web Design by Srilanka Muslims Web Team