பெற்றோலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும்’ » Sri Lanka Muslim

பெற்றோலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும்’

petrol

Contributors
author image

Editorial Team

பெற்றோலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியுமென, பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இறக்குமதி வரி, உள்நாட்டு வரி, துறைமுகம், விமான நிலைய அபிவிருத்தி வரி மற்றும் தேசிய கட்டட நிர்மாண வரி ஆகிய நான்கு வரிகள் எரிபொருட்களுக்கு விதிக்கப்படுவதாக அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 67 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்ற நிலையில் அரசாங்கம் பெற்றோலின் விலையை 137 ரூபாவாக உயர்த்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னைய மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், கடந்த 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களாக இருந்த சந்தர்ப்பத்தில் பெற்றோலின் விலையை 137 ரூபாய்களாக அதிகரித்ததாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த அரசாங்கம் மசகு எண்ணெயின் விலை 67 டொலர்களாக காணப்படுகின்ற நிலையில் பெற்றோலின் விலையை அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் “பெற்றோலை ஏன் 117 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியவில்லை” என்பது தொடர்பில் அரசாங்கத்தின் பொருளியல் நிபுணர்கள் விளக்கமளிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Web Design by The Design Lanka