அமைச்சர்களான பௌசியும் அஸ்வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்காக மார்க்கத்தை காட்டிக்கொடுக்கின்றனர் - அசாத்சாலி - Sri Lanka Muslim

அமைச்சர்களான பௌசியும் அஸ்வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்காக மார்க்கத்தை காட்டிக்கொடுக்கின்றனர் – அசாத்சாலி

Contributors
author image

Editorial Team

 தம்புள்ளவில் பள்ளிவாயல் மீதான பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு புத்த பிக்குவே முழுக்காரணம் என்று பகிரங்கமாக கூறுவேன்.   ஏற்கனவே  காளி அம்மன்  கோவிலை அங்கிருந்து அகற்றிய புத்த பிக்குவே தற்போது பள்ளிவாயலை அகற்றும் முயற்சியில் ஈடுபாட்டுள்ளார் என்று காளி கோவில் இடிப்புக்கு  எதிராக நாம் உரக்க குரல் கொடுத்தமையே இன்று பள்ளிவாயல் குண்டுத்தாக்குதலுக்கு  வித்திட்டுள்ளது. தமிழ் முஸ்லிம்  சமூகம் ஒன்றுபட்டு  செயற்பட வேண்டும் என்பதனை  மறந்ததன் விளைவே இது என்று மத்திய  மாகாண சபை உறுப்பினர் அசாத்சாலி தெரிவித்தார்.
 
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.  அவர்  தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
 
அமைச்சர்களான பௌசியும் அஸ்வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்காக மார்க்கத்தை காட்டிக்கொடுக்கின்றனர். பள்ளிவாயலில்  பட்டாசினாலேயே வெடி ஏற்பட்டுள்ளதாக ஒரு பொய்யான பிரசாரத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளமை வேதனை அளிக்கின்றது.  மார்க்கத்தை  மறந்து  அல்லாவை  மறந்து அவர்கள் நடந்தாலும் அல்லா ஒருநாள் கேள்வி கேட்பார் என்பதனை  அவர்கள் மறந்து விடக்கூடாது.
 
தமிழ் – முஸ்லிம் மக்களின் இனநல்லுறவு என்பது இன்று   மிக  முக்கியமானது. நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் தேவை. இதனை அமைச்சர் ரவூப் ஹக்கீம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விட்டு விலகி வர வேண்டும். எமது தலைவர் அஷ்ரப்பின் வழியில் அவர் செல்ல வேண்டும். அஷ்ரப்பின் கனவினை நனவாக்க  அவர் செயற்படல் வேண்டும்.
 
நாம் பள்ளி உடைப்பு தொடர்பான  ஆதாரங்களை பொலிஸாருக்கு வழங்கியும் அவர்கள் சட்ட நடவடிக்கை எதனையும் எடுக்காமையானது பொலிஸ் துறையின்  திறனற்ற செயற்பாட்டினையும் எமக்கு காட்டுகின்றது. (VK)

Web Design by Srilanka Muslims Web Team