பேசி வைத்த வெளி நாட்டு மாப்பிள்ளை, ஆபாசத்தால் வாழ்க்கை கேளிவிக்குறியான சோகம்..! - Sri Lanka Muslim

பேசி வைத்த வெளி நாட்டு மாப்பிள்ளை, ஆபாசத்தால் வாழ்க்கை கேளிவிக்குறியான சோகம்..!

Contributors

  • ஒரு பெண்ணின் உடல் அழகுகள் ஆபாசத்தில் பார்த்து ரசிக்கும் பெண்களைப் போல் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தால்,
  • பேசி வைத்தவன் கேட்கிறான் என்று
    உங்கள் ஆடை மறைக்கும் அவ்ரத்தை அவனுக்கு விருந்து வைக்கும் ஒரு சகோதரியாக இருந்தால்,
  • பேசி வைத்த / வயது வந்த / காதல், பெஸ்டி என சீரழியும் ஆண், பெண்களாக இருந்தால் அவசியம் முழுமையாக வாசிக்கவும்.
  • காலத்தின் தேவையாக மிகவும் வெளிப்படையாக பதிவாகும் இந்த ஆக்கத்தையும் இதனை மன முதிர்சியுடன் செயர் செய்வோரை, கருத்துச் சொல்வோரையும்,

நாகரீகமாக எதிர்கொள்ள மன முதிர்ச்சியும், வயது முதிர்ச்சியும் அவசியம் தேவை என்பதை முன் கூட்டியே அறிவித்துக் கொள்கிறோம்.

பேசிவைத்தவெளிநாட்டு மாப்பிள்ளை

ஹாய் டீ பொண்ணு…….
அடுத்தவாரம் திருமண பந்தத்தில் இனைய இருக்கும் என் உயிர் தோழியின் அறைக்குள் அவளை செர்ப்ரைஸ் (Surprice) செய்ய வாங்கிய பெருநாள் ஆடையுடன் நுளைகிறேன்.

கட்டிலில் குப்புரப்படுத்திருந்தவள்
அந்த நேரத்தில் என்னை சற்றும் எதிர்பார்க்காததால் கட்டிலில் இருந்து துள்ளியெழுந்தாள்.

“என்னடி அழுவுறாய்” எனக் கேட்ட என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டவளின் கைகள் நடுங்கியது,

“எனக்கு இப்பவே உன் வீட்ட வரனும்! என்ன சரி ஒரு பொய்ய சொல்லி உடனே கூட்டிப் போ, நான் உன் கூட கொஞ்சம் கதைக்கனும் இல்ல எண்டால் என்ன உசுரோட நீ பார்க்க மாட்டாய்”

என அழுது
நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பேரிடியைத் தந்தாள் மிஷ்ரா.

கல்யாணத்துக்கு
மருதாணி டிசைன் பார்க்கனும் என பொய் கூறி அவளை அழைத்துச் சென்றேன்.

என் அறைக்குள் வந்தவள்
மீண்டும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.

“என்ன டீ …! என்ன நடந்தது சொல்லு..”

“இந்தக் கல்யாணம் நடக்காது டி…”

எனக்கு
மறு படியும் தூக்கி வாரிப் போட்டது,
அவளால் அதற்கு மேல் கதைக்க முடியவில்லை.

ஏங்கி ஏங்கி குழந்தை போல் அழுது கொண்டிருந்தவள ஆசுவாசப்படுத்தி நடந்ததைத் தெரிந்த கொண்ட போது,

அவள் கூறிய விடயம்
எனக்கு பெரிய அதிர்ச்சியை தரவில்லை என்றாலும் பேசி வைத்து மூன்றாவது வாரம் முதல் இப்படி செய்து விட்டாளே! என அவள் மீது ஒரு வித வெறுப்பும் கோபமும் மட்டுமே வந்தது.

ஆம் இன்று
பேசி வைத்தவர்கள் மட்டும் அல்ல கள்ளத் தனமாக தொலை பேசியில் கதைத்துக் கொள்ளும் 13-14 வயசு சிறிசுகளும் கூட ,

வெட்கம் கெட்டு, மானம் கெட்டு, காமத்தை, உணர்ச்சியை அடக்கிக் கொள்ளத் தெரியாமல் செய்து கொண்டிருக்கும் அதே மானம் கெட்ட போன் செக்ஸ் (Phone Sex) இனை தான் 22 வயதான இவளும் கடந்த சில மாதங்களாக செய்திருந்தாள்.

மிஷ்ராவின்
கல்யாணத் திகதி நிச்சயமாகிய இரு நாட்களில்,
அவனின் மூத்த சகோதரி இவர்களது வீட்டிற்கு வந்து,

“பொடியன் நாட்டிற்கு வர ஒரு மாசம் உள்ளது. அப்படியே நாட்டிற்கு வந்த பிறகும் அடிக்கடி இந்த வீட்டிற்கு வாராது மரியாதை இல்ல தானே! “

சிறிசுகள் ஒரு அண்டஸ்டேண்டிங்கு (Understanding) வரவும் வேண்டும் தானே!” என்று கதை அளந்து,

அவன்அன்பளிப்பாக கொடுத்த தொலை பேசியை இவளிடம் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.

மாப்பிள்ளை வீட்டார் எதை சொன்னாலும் தலையை மட்டும் தான் ஆட்ட வேண்டும் என்ற மரபோ என்னவோ மரியாதையான அந்த குடும்பமும் மண்டையை ஆட்டி விட்டனர்.

கல்யாணத்து முன் ஊர் அறிய
அந்த மாப்புள்ள அவ்வப்பொழுது வந்து செல்வது முறையல்ல, ஒழுக்கம் இல்ல என்று கூறி விட்டு,

24 மணி நேரமும் தொலை பேசியில் அவர்கள் இருவரும் கதைத்துக் கொள்வதை மானக் கேடான விடயமாக பார்க்கத் தெரியாத கோமாளிகளை என்ன சொல்வது.

நேரில் வந்தாலாவது
எதோ கதைத்து விட்டு சென்று விடுவான், இந்த போனில் (Phone) அவர்கள் இருவரும் எதை கதைக்கிறார்கள், எதைக் காட்டுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை விடுங்கள்,

“மானக் கேடானதை செய்து விடாதே”
என அந்த பெண்ணிடம் ஒரு வார்த்தை கூறவோ, அவர்கள் கதைக்கும் இடத்தில் இருந்து கொள்ளவோ பேசி வைத்தவளின் தாய்க்கேனும் தைரியம், உரிமை உள்ளதா? அல்லது யாராவது சொல்லிக் கொடுக்கப் போனால் தான் சும்மா இருப்பார்களா ?

போன் (Phone) கிடைத்தது முதல்
காதல் மழையில் இருவரும் நனையத் தொடங்கி, அது காம வெள்ளமாகி இப்போது நீந்தவும் முடியாமல், மூழ்கவும் முடியாமல் மானத்தை காப்பாற்றிக் கொள்ள தத்தழித்துக் கொண்டிருந்தாள் அவள்.

பேசி வைத்து ஒரு மாதத்தில் நாடு வர இருந்தவன் கோவிட் நிலமைகள் காரணமாக வர முடியாமல் 7 மாதங்கள் கடந்தே நாடு வந்திருந்தான்.

மாதக்கணக்காக அவளை விதம் விதமாகப் பார்த்து ரசித்து தீர்த்தவன்
கடந்த இரண்டு மாதகாலமாக கொஞ்சம் கொஞ்சமாக அவளது உடலில் இயற்கையாக இருக்கும் சில அம்சங்களில் தனது அதிருப்தியை கூற ஆரம்பித்துள்ளான்.

அவருக்கு கைப்f என்ற
அந்த நடிகையை ரொம்ம்ம்ப பிடிக்கும் என்பதால் தானாம் அவளைப் போல் சிவத்த, மெலிந்து உயரமான மிஷ்ராவை மனைவியாக்க முடிவு செய்தாராம்.

ஆனால் வெளித் தோற்றத்தில் அவளது உடல் கொடுத்த கவர்ச்சி உள் தோற்றத்தில் இல்லையாம். அவளது உடலில் சில அளவுகளும் அதன் வடிவங்களும், சில நிறங்களும், பிறப்பால் உடலில் அங்கிங்கு இருக்கும் மெல்லிய ரேகைகளும் கூட அவருக்கு திருப்தியாக இல்லையாம்.

ஆக மொத்தம் பெண்களின் உடல் அழகு அவர் ஆபாசமாகப் பார்த்து ரசித்த பெண்களைப் போல் தான் இருக்கும் என்ற நினைப்பில் தான் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார்.

இப்படிப்பட்ட மன நோயிகள் பெண்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கு உடலில் ஆங்காங்கு இயற்கையான மெல்லிய ரேகைகள்,

உடல் பருமன், மெலிவு வித்தியாசங்களால் வந்த ரேகைகள், சில இடங்களின் அளவுகளில், தோற்றங்களில் ஒன்றுக் கொன்று வேறுபாடுகள், முகம், கை, கால் என்று முடி இருத்தல்,

உடல் நிறமானது முகம் ஒரு நிறத்தில், கை ஒரு நிறத்தில் என்று ஒவ்வொரு இடமும் சற்று வேறு பட்ட நிறங்களில் இருத்தல் என்று பல விடயங்கள் சர்வசாதரணமாக இருக்கும் விடயங்களாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் நீங்கள் ரசித்து ரசித்து
உச்சந்தலையில் கற்பனையோடு வெறியேற்றிக் கொண்டிருக்கும் நடிகைகளையே,

“அவள் மேக் அப் (Makeup) இல் தான் அழகு” என்று கூறும் போது, அதை ஏன் கட்டிக்கப் போறவளிடமும் ஏற்று கொள்ள முடியாது?

ஆபாசமாக இருக்க வேண்டும்,
அதனை அத்தனை பேரும் ரசிக்க வேண்டும், அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காகவே, தன் உடல் அழகை மட்டுமே குறிக்கோலாக கொண்டு,

முகத்திற்கு மட்டுமல்ல
ஒவ்வொரு டேக் (Take) இற்கும் இடையில் அவள் கவர்ச்சி காட்டும் அத்தனை இடங்களையும்,நீங்கள் வாயப் பிழந்து ரசிக்கும் அத்தனையையும்,

அந்த மேகப் ஆர்ட்டிஸ்ட் (Makeup Artist)
டச் அப் (Touch Up) செய்து மறைப்பதால் தான் அவள் பளிங்கு சிலையாக ஜொலிக்கிறாள்.

போதக் குறைக்கு
மணிக்கணக்கு பேர்சனல் ட்ரெய்னர் (Personal Trainer) வைத்து, ஜிம் (Gym) சென்று , யோகா (Yoga) செய்து,

ப்லஸ்ட்டிக் சேர்ஜரி (Plastic Surgery) ,
செலூன் (Saloon) மெடிக்யூ , பெடிக்யூ, வெக்சிங், என்றும் அதற்கு ஏற்ற உணவுகளென்றும் பணத்தை வாரி வீசி, நேரத்தை முழுதாக ஒதுக்கி …….
பக்குவமாக இருந்து தான் அவள் அப்படி தோற்றம் தருகிறாள் என்றிருக்க,

பொண்டாட்டியாக வரப் போகின்றவளோ
சாதரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பாள்.
அவள் மனைவியாகி வந்தால்
சமைத்தும் தர வேண்டும், உடை கழுவியும் தர வேண்டும், மாமி, மாமவை கவனிக்கவும் வேண்டும்,

இரவு பகல் இல்லாமல்
வீட்டை சுத்தமாக வைக்கவும் வேண்டும், சுகத்தையும் தர வேண்டும், பிள்ளையையும் பெற்றுத் தர வேண்டும் என்று ஒரு பட்டியலையே போட்டு தான் தேடுவீர்கள்.

அவள் இந்த விடயங்களில் உருப்படி இல்லை என்றால் அதற்கும் அவளது குடும்பத்தோடு சேர்த்து திட்டி சண்டை,விவாகரத்து வரை சென்றும் விடுவீர்கள் என்றுக்க,

அவளது உடலில்
வளைவு நெலிவுகள், அங்க அளவுகள், அது இதுகள் அப்படி இப்படி இருக்கக் கூடாது என்றும் எதிர்பார்த்தால் எப்படி சார் சரியாகும்?

அவள் நடிகையைப் போல்
அவளை தயார் செய்வதா அல்லது…….?

இதற்கு பேசாமல்
ஒருத்தியை மனைவியாக தெரிவு செய்ததன் பின்,
அவளிடம் எந்த பொறுப்புகளையும் எதிர்பாராமல்,

நீங்கள் ஆசைப்பட்ட உடல் அமைப்பு
அவளிடம் வரும் வரை அவளை ஜிம் அனுப்பி, ப்லாஸ்ட்டிக் சேர்ஜரி (Plastic Surgery) செய்து, செலவு செய்து மனைவியாக்கிக் கொள்ளளாமே!

வரப்போகும் மனைவியின்
ஆடைக்கு வெளியில் இருப்பதை வைத்து இவர் கற்பனை செய்வதைப் போலவே அனைத்தும் இருக்க வேண்டும் என்றால், அந்தப் பெண்ணுக்கும்
அந்த ஆணிடம் அதே உரிமைகள் உள்ளது.

கல்யாணம் கட்டிக் கொள்வது
ஆணின் ஆசைகளையும் தேவைகளையும் அவனுக்கு வேண்டிய விதத்தில் மாத்திரம் ஒருத்தியைத் தெரிவு செய்து அனுபவித்துக் கொள்ள அல்லவே. அப்படி
என்று நினைத்தால் மனைவி என்பவள் என்ன விபச்சாரியா?

அந்தப் பெண் நினைத்தால்
“உனது அது சரியில்லை, அங்கு கருப்பாக உள்ளது, இங்கு இப்படி உள்ளது” என்று திருமணத்தின் பின் கூட அந்த ஆணை அவமானப்படுத்தி அடியோடு சாய்த்திடலாம். ஓரங்கட்டலாம்,

ஆனால்
பொதுவாக எந்தப் பெண்ணும் அப்படி வாய் திறப்பதும் கிடையாது. ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக எடுக்காமல் வாழ்ந்து சென்றிடுவார்கள்.

அப்படியே அவள் அப்படி வாய் திறந்தால்
என்ன என்ன கேவலமான கதைகளை எல்லாம் அவள் மீது எம் பெண்களே தினிப்பார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டுமா என்ன?

_

_

அவன் நாட்டிற்கு வரும் நாள்
நெருங்க நெருங்க “எனக்கு உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது. அதனால் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று உன் வீட்டில் கூறு” என நச்சரிக்க ஆரம்பித்திருந்தவன்,

நான் அவளது வீட்டிற்கு சென்றிருந்த தினம்
(திருமணத்திற்கு வெறும் ஒரு மாத காலம் மட்டுமே இருக்கும் இந்த சந்தர்பத்தில்,)

“நீ இதை செய்யா விட்டால்
உன் போட்டோகளை (Photos) , வீடியோகளை (Videos) பகிரங்கப்படுத்தி,

“நீ ஒழுக்கம் கெட்டவள்” என கூறி கல்யணத்தை நிறுத்துவேன் என்று பெட்டைத்தனமாக இவளை மிறட்ட ஆரம்பித்து இருந்தான்.

பேசி வைத்தவன் ஒன்றும்
கல்யாணம் கட்டிக் கொண்ட கணவன் கிடையாது. அட கல்யாணம் கட்டிய வாழ்க்கையே நிச்சயம் இல்லாமல் விவாகரத்து ஆகிப் போகின்ற போது இப்படி பட்டவனை நம்பி,

ஆபாசமான
அவனது உணர்ச்சி தூண்டுதல்களுக்கு இடம் அளித்து, மானத்தை மறைத்த ஆடையை கேமேரா முன் கொஞ்சம் கொஞ்சமாக களைத்து அவ்ரத் என்ற சொத்தினை தொலைத் தொடர்பு சாதனம் மூலம் காட்டி மானம் கெட்டவளாக நடந்து கொள்ள வரும் அந்த துணிவிற்கு,

காதல்,பாசம், நம்பிக்கை, கத்தரிக்காய் என்று என்ன
கூறிக் கொண்டாலும் அது அவளது ஒழுக்கம் கெட்ட தனம், அடக்க முடியாத தனம் மட்டுமே என்பதை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹலாலான கணவனுடன் கூட
நான்கு சிவருக்குள் எவருமே பார்த்து விடக் கூடாது, எவருக்குமே சிறு சத்தம் கூட கேட்டு விடக் கூடாது என அவதானமாக மானம் காக்க நடந்து கொள்ளும் போது இங்கு மட்டும் கோட்டை விட்டு விட்டு கதை அளந்து என்ன பலன்?

ஒவ்வொரு பெண்ணும் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு ஆணிற்கு
பேசி வைத்தவள் என்பவளிடம் கண்டதையும் கழ*டிக் காட்டு என கட்டளை போட எந்த உரிமையும் கிடையாது.

அப்படி காட்டச் சொல்லி
அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்து சண்டை வந்து அந்த கல்யாணமே நின்று போனாலும் கூட கவலைப்பட வேண்டிய தேவை கிடையாது.

காரணம்
இப்படி கழ*டிக் காட்டிய பின் எதாவது ஒரு சிறு பிசகல்/ மிஷ்ராவிற்கு நடந்ததைப் போல் ஒரு சம்பவம் நிகழ்ந்து அந்த திருமணம் நின்று விட்டால்,

அதன் எதிர் மறையான விளைவுகளை முழுமையாக அனுபவிக்க போவது அந்த பெண் மட்டுமே என்பதை தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள். அந்த வதையை விட அந்த திருமணம் தடைப்படுவது மேல் அல்லவா!

செக்ஸ் (Sex) என்ற விடயம்
ஒரு தம்பதியினர் கருப்போ, சிவப்போ, கொழுத்தோ, மெலிந்தோ, எது எப்படி இருந்தாலும்,

அதனை முழுத் திருப்தியுடன்
நிறைவேற்றிக் கொள்ள, ஏன் அவனை விட அவள் வயதில் மூத்தவளாகத் தான் இருந்தாலும் கூட
வழி வகைகள் உள்ளது என இருக்கும் போது,

பேசி வைத்தவள்
என்ற உரிமையைப் பாவித்து அவளது உடலை ஆராய்ச்சி செய்து, அதன் பின் அவளை மனைவியாக முடிவு செய்ய அவள் இச்சையை மட்டும் தீர்க்க வரும் விபச்சாரி கிடையாது. மாறாக வாழ்க்கை என்ற அற்புதமான விடயத்தை,

“இவன் என்னை வாழ வைப்பான்” என்ற நம்பிக்கையில், செக்ஸ் என்ற விடயத்தையும் தாண்டி
கணவன் மனைவி என்ற எத்தனையோ புரிந்துணர்வுகளுடன் ஆரம்பிக்க வருபவளே மனைவி என்பவள் அதில் ஒரு சிறிய பயணம் மட்டுமே செக்ஸ் வாழ்க்கைக்குறிய உடல் அழகு என்பதாகும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மார்க்க அணுமதிக்குள் ஒருத்தியைப் பெண் பார்த்து “இவளை என் மனைவியாக்கிக் கொள்கிறேன்” என முழு மனதுடன் முடிவு செய்து,

முறையாக திருமணத்தை முடித்ததன் பின்பு மட்டுமே அவர்கள் தமது அந்தரங்கங்களை ஒருவருக்கு ஒருவர் வெளிப்படுத்த வேண்டும்.

அங்கு (அவனுக்கு, அவளுக்கு)
தான் நினைத்ததை விட அற்புதமாகவோ அல்லது எதோ ஒரு சிறு மனதை உருத்தும் விடயங்களாகவோ கூட அந்த உடல் அந்தரங்கங்கள் இருக்கலாம்.

ஆனலும்
முதல் முறையாக அவளை அவனும், அவளை அவனும் ஹலாலாஹ பார்க்கும்போது, அங்கு அனைத்தும் இருவர் கண்களுக்கும், மனதிற்கும் புதிதாகவே இருக்கும்.

அந்த துனையை, அவளது அந்தரங்க செயற்பாடுகளை ரசிக்கையில் அந்த எக்சைட்மெண்ட், அந்த இன்பங்கள், எம் கண்களுக்கு அனைத்துக் குறைகளையும் மறைத்து மனத் திருப்தியையும் இன்பமுமான வாழ்வையும் தரும்.

அங்கு
எதேனும் சிறு மன நிறைவின்மைகள் இருந்தால் கூட அதனை மனப் பூர்வமாக ஏற்று,

“இறைவா!
இதனை, இந்த விடயத்தை எனக்கு திருப்தியாக்கித் தந்து விடு, இதனை காரணமாகக் காட்டி என்னை பாவங்களின் பக்கம் இழுத்துச் சென்று விடாதே”

“இதனை ஒரு குறையாக, மனத் திருப்தியின்மையாக என் கண்களுக்கும், மனதுக்கும் காட்டாமல் மறைத்து எனக்கென நீ முடிவு செய்த என் துனையுடன் நிம்மதியான திருப்தியான வாழ்வை தந்து விடு” என இறைவனிடம் கேட்க வேண்டும்.

எம்மிடம் கூட சில அந்தரங்க குறைகள்
நிறத்தில், உருவத்தில் என்று இருக்கலாம், அதனை வைத்து நாம் எமது துனையைப் பொருந்திக் கொள்ள வேண்டும், இது தான் வாழ்க்கையின் அடிப்படைப் பாடம்.

இது எதுவுமே இல்லாமல்
ஒருத்தியின் உடல் அழகை மட்டும் குறிக்கோளாக வைத்து வாழ்க்கைத் துனையைத் தேடினால் அந்த வாழ்க்கை ஒரு சில மாதங்கள் வரையேனும் நிலைத்து ஓடுவது கேள்விக் குறியே!

_

_

மிஷ்ரா ஒவ்வொன்றாக கூறக் கூற
எனக்கு தலை சுற்றியது. “இரண்டு நாள் பொறு அதுவரை நிதானமாக இரு மிகுதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறி அவளை வீட்டில் விட்டு வந்தேன்.

இரவு என்னை விட 9 வருடங்கள் மூத்தவரான என் கணவர் வீடு வந்ததும்,மிஷ்ராவின் விடயத்தை
அவர் தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு கூறி முடித்தேன்.

எமக்குத் தெரிந்த பெண்
குடும்பவியலாலர் ஒருவருடன், நம்பிக்கை காக்கக் கூடிய நிதானமான சிலர் மூலமும் அவனை அனுகி எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவன் இறங்கி வரத் தயாராக இல்லை.

காரணத்தை வெளிப்படையாகவே கூறுவதாயின்
அவனுக்கு மிஷ்ராவை நேரடியாக அனுபவிப்பது என்ற ஒரேயொரு விடயம் மட்டுமே எஞ்சியிருந்த விஷயமாகும். ஏனைய அனைத்திலும் அவள் கோட்டை விட்டு விட்டாள்.

வற்புறுத்தி திருமணம் செய்து வைக்க வாழ்க்கை என்ன பலாப்பழமா? நடந்ததை அவளது பெற்றோரிடம் கூறி அது அல்லோல கல்லோலமாகி அந்தத் திருமணம் நின்று போனது.

அவனிடமிருந்து எந்தவொரு ஆதாரத்தையும்
மீட்கும் சாத்தியம் கிடைக்கவில்லை.

22 வருஷம் ஒழுக்கமாக வாழ்ந்தவள்
பேசி வைத்தவன் என்பவனுடன் சந்தோஷமாக வாழ நினைத்து,

அவனை சிற்றின்பக்கடலில் மிதக்க வைத்தற்கு கூலியாக தனது வாழ்க்கையை ஆழ் கடல் இருட்டுக்குள் தொலைத்து விட்டாள்.

இதனையே யோசித்து யோசித்து
மன நலமும் டிப்ரெஷன் என்ற நிலைக்கு சென்று இன்றுவரை வைத்தியர், மருத்துவம், நிம்மதியிழந்த வீட்டுச் சூழல் என்று மிஷ்ராவும், அந்தக் குடும்பமும்
சுமார் ஒரு வருட காலமாக விழுந்து கிடக்கிறது.

இது எல்லாம் நடந்து முடிந்த சில மாதங்களின் பின்
மிஷ்ராவின் முன்னால் பேசி வைத்தவனுக்கு
அவனுடன் வெளி நாட்டில் வேலை பார்க்கும் ஒருவரின் மனைவியுடன் இருந்த திருட்டு உறவு அகப்பட்டு,

அதில் அவருக்கு ஊரார் வைத்த சிறப்பான விருந்தில் ஒரு கால் முற்றாக செயலிழந்து, கை, மண்டை என அனைத்தும் உடைத்து வைத்தியசாலையில் போடப்பட்டுள்ளான் என்ற செய்தி என் காதுகளை வந்தடைய,

ஒரு மனிதனின் சோகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சியை வாழ் நாளில் முதன் முறையாக நான் உணந்தேன்.
இதைக் கேட மிஷ்ராவின் முகத்திலும் அந்த மகிழ்ச்சி
உணர்விழந்ததொரு மெல்லிய கோடாக உதித்து அப்படியே உதிர்ந்து போனது .

தான் உயிராக மதித்த மானத்தை
எவனோ ரசித்து முடிந்து விட்டானே என்ற அந்த வலிக்கு முன்னால்,
அவன் உயிரே போனாலும் அவளுக்கு அது ஒரு பொருட்டல்ல.

அவளை அந்த இடத்திலிருந்து மீட்டி எடுக்க நாம் அனைவரும் போராடும் போராட்டத்திற்கு இறைவன் விரைவில் நல் வழி காட்டட்டும்.

இதே நிலை
நாளை உமக்கும் வரலாம் என்பதை இன்று செல் போன் முன்னால் உங்கள் அவனுக்காக நிற்கும் ஒவ்வொரு நொடியும், அந்த ஆடை அவ்ரத்தை நோக்கி குறைந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கொள்ளவும்.

ஒரு பெண்ணின் உடல் அழகு
ஒருத்தனின் சிற்றின்பப் பசிக்கு இறையாகும் போது அதில் நிம்மதியை இழப்பது அந்தப் பெண் மட்டுமே என்பதை உணர்ந்து ஒழுக்கத்தை பேசி வைத்தவனுக்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்.

Web Design by Srilanka Muslims Web Team