பேய்களுக்கு அச்சமென்றால் சுடுகாட்டில் வீடு கட்டியிருக்க மாட்டோம் :ஜனாதிபதி - Sri Lanka Muslim

பேய்களுக்கு அச்சமென்றால் சுடுகாட்டில் வீடு கட்டியிருக்க மாட்டோம் :ஜனாதிபதி

Contributors

பேய்களுக்கு அச்சமென்றால் சுடுகாட்டில் வீடு கட்டியிருக்க மாட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்திற்கு சென்று இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்த சிலர் முயற்சிக்கின்றனர்.சர்வதேச சக்திகளைக் கொண்டு இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்த சில தரப்பினர் முயற்சி மேற்கொள்கின்றனர்.

கடன் பெற்றுக்கொள்வதாக குற்றம் சுமத்துகின்றனர். நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே கடன் பெற்றுக்கொள்கின்றோம்.

ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது.வெளிநாடுகளுக்கு சென்று அரசாங்கத்திற்க எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.எந்த தரப்பிற்கும் அஞ்சப் போவதில்லை.பேய்களுக்கு பயந்தால் சுடுகாட்டில் வீடு அமைக்க முடியாது என பழமொழியொன்று உண்டு.

தாய் நாட்டுக்கு ஆற்ற சேவையை நாங்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளோம்.எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் நாம் எமது பயணத்தை கைவிட மாட்டோம்.நாட்டின் ஜனநாயகத்தின் மீது எமக்கு நம்பிக்கை உண்டு.

மக்களின் நம்பிக்கையை நாம் ஒரு போதும் சீர்குலைக்க மாட்டோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.கடுவலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team