பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 13 பேரின் தூக்குத்தண்டனையை நிறுத்தக் கோரும் வழக்கு விசாரணை தொடங்கியது! - Sri Lanka Muslim

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 13 பேரின் தூக்குத்தண்டனையை நிறுத்தக் கோரும் வழக்கு விசாரணை தொடங்கியது!

Contributors

தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட 13 கைதிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை 3 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் நேற்று தொடங்கியது. கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட – ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட தூக்கு தண்டனை கைதிகள் பலர், தண்டனையை நிறைவேற்ற காலதாமதம் ஆனதால் தங்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இதை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி அளித்த தீர்ப்பில், மரண தண்டனையை குறைப்பதற்கு, கருணை மனுவை நிராகரிப்பதில் ஏற்படும் காலதாமதத்தை ஒரு காரணமாக கூற முடியாது என கூறியது. இதில் சர்ச்சை ஏற்பட்டதால் 13 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இவர்களின் மனுக்களை தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரிக்க தொடங்கியது. இதையடுத்து குற்றவாளிகள் பற்றிய விவரங்கள், கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவரம், குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதா என்ற தகவல்களை அளிக்கும்படி மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Web Design by Srilanka Muslims Web Team