பேராசைகள் (கவிதை) » Sri Lanka Muslim

பேராசைகள் (கவிதை)

perasai

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


பெரிய பெரிய ஆசை
பிறப்பு முதல் ஆசை
கொத்து கொத்தாய் ஆசை
சொத்து சேர்க்க ஆசை
அன்னை மடி தொட்டு
ஆரம்பிக்கும் ஆசை
மண்ணறைக்கு சென்று
மறையும் வரை ஆசை

கண்டபடி எகவுண்டில்
காசு சேர்க்க ஆசை
இண்டர் கூலர் வாங்கி
இருந்து போக ஆசை
வெள்ளி தங்கம் நகைகள்
அள்ளி சேர்க்க ஆசை
உள்ள காணிக்கெல்லாம்
உறுதி முடிக்க ஆசை

கடை கடையாய் போட்டு
கட்டியாள ஆசை
அடியாட்கள் வைத்து
ஆட்சி செய்ய ஆசை
பெரிய பதவி பெற்று
பெருமை கொள்ள ஆசை
புரிய வரும் முடிவில்
பூமி பொய் என்று

பொய் வேசம் போட்டும்
புகழ் வாங்க ஆசை
டை பண்ணியேனும்
பையனாக ஆசை
காணும் பெண்கள் மேலே
வீணாய் வரும் ஆசை
இருக்கும் ஆசையெல்லாம்
இறுக்கும் இறுதி வேளை

பேராசை கொண்டு
பித்தலாட்டம் ஆடி
ஊரை ஆண்ட ஆட்கள்
பேருமின்றிப் போனார்
உள்ளதனைப் பொருந்தி
நல்ல செயல் செய்தால்
செல்லும் மறுமை வாழ்வில்
உள்ளதெல்லாம் கிடைக்கும்

Web Design by The Design Lanka