பேராயர் மல்கம் ரஞ்சித்தின் சிறப்பு ஊடக அறிக்கை இன்று!! - Sri Lanka Muslim

பேராயர் மல்கம் ரஞ்சித்தின் சிறப்பு ஊடக அறிக்கை இன்று!!

Contributors

ஜனாதிபதி சட்டத்தரனி ஜெனரல் ஹரிகுப்தா ரோஹனதீர நேற்று (01) கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் அவரை சந்தித்த போது அவரால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஜனாதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பேராயர் மல்கம் ரஞ்சித் இன்று (02) சிறப்பு ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட உள்ளார். இச்சந்திப்பு இன்று பிற்பகல் பிஷப் தேவாலயத்தில் இடம்பெற உள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி விரிவான பிரச்சாரத்தை நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் மாநாடு தெரிவித்துள்ளது.அதன் முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 07) நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் அமைதியான போராட்டத்தை அறிவித்துள்ளது.

அந்த முடிவின்படி, மார்ச் 07 ‘கருப்பு ஞாயிறு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம், கறுப்பு உடையணிந்து அனைத்து கிறிஸ்தவர்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்தக் கோரி அமைதியான போராட்டத்திற்கு தேவாலயங்களில் கூடுவார்கள், அதைத் தொடர்ந்து பிரார்த்தனைகள் இடம்பெறவிருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை பேராயருக்கு வழங்கப்படுகிறது

ஏப்ரல் 21, 2019 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி பேராயர் மல்க்கம் கார்டினல் ரஞ்சித்துக்கு வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி ஜெனரல் ஹரிகுப்தா ரோஹனதீர நேற்று (01) கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் சந்தித்த போது அவரின் கோரிக்கையை கருத்தில் எடுத்துக்கொள்வதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team