பேராறு ஆற்றுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தருமாறு கோரிக்கை..! - Sri Lanka Muslim

பேராறு ஆற்றுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தருமாறு கோரிக்கை..!

Contributors

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் கிராமம் பகுதியினூடாக செல்லும் பேராறு ஆறானது 1986 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.தற்போது இவ்ஆற்றினை புனரமைக்கப்படாததால் மண் சரிவுகள் மற்றும் ஆறின் நீர் ஓட்டங்கள் இன்றி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு ஆற்றில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதாலும்,பற்றைக்காடுகளாக புற்கள் நிறைந்து காணப்படுவதால் இவ் ஆற்றில் இரு மருங்கள் இடிந்து விழுந்து வருவதாகவும் பாரிய அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் புனரமைத்து தருமாறும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆறு கந்தளாய் பிரதேசத்திலிருந்து ஆரம்பித்து தம்பலாகாமம், முள்ளிப்பொத்தானை கப்பல்துறை ஊடாக திருகோணமலை கொட்டியாரக் குடா கடலுடன் கலக்கின்றது.

திருகோணமலை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றார்கள்.

இதனால் ஆற்றில் ஓராமாக சென்ற பாதை கூடி இடிந்து போடியுள்ளதாகவும் தடுப்புச் சுவர் ஒன்றினை அமைத்து தருமாறும் கோரிக்கை விடுப்பதோடு,

ஆற்றுக்கான தடுப்புச் சுவர் அமைத்து தருமாறு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

1986 ம் ஆண்டு கந்தளாய் குளம் உடைப்பெடுத்து 67 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team