பேரியல் அஷ்ரபின் மகத்தான சேவைகள்! » Sri Lanka Muslim

பேரியல் அஷ்ரபின் மகத்தான சேவைகள்!

feriyal

Contributors
author image

Editorial Team

முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப் கபினட் அமைச்சராக பதவி வகித்தும்  அம்பாறை மவாட்டத்தின் அபிவிருத்திக் குழு தலைவியாகவும்  பதவி வகித்தும் அவா் 2000, 2006 – ஆண்டு காலப்பகுதிக்குள் –  6 வருடத்திற்குள்   செய்த  அபிவிருத்தியில் தற்போதைய  பிரதி அமைச்சா்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து 05 வீத சேவையைக் கூட இம் மக்களுக்கு செய்யவில்லை என்று மக்கள்  இப்போது  கூறுகின்றனர்.

பேரியல் அஷ்ரப்  அவா்கள்  அம்பாறை கரையோர முஸ்லீம் தமிழ்  பிரதேசங்களில்  மட்டுமல்ல  சிங்கள பிரதேசங்களில் செய்த சேவைகளினை தற்பொழுது மக்கள் நன்றாக அனுபவிக்கின்றனா். பின்னா் ஆட்சிக்கு வந்து மக்களின் வாக்குகளை பெற்று அமை ச்சா்களாகவும் மக்கள் பிரதிநிதிகளாகவும் கடந்த 10வருடங்களுக்கு மேல் பல பிரதிநிதிகள் இருந்து வருகின்றனா். அவர் செய்த சேவைகளில் ஆகக் குறைந்தது 05 வீத சேவையைக் கூட தற்போதைய  தலைவா்களினால் செய்ய முடியவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனா்.

அம்பாறை மாவட்டத்தில்  தனியே ஒரு  அமைச்சராகவும்  அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு தலைவியாகவும்  முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச அவா்களின் ஆட்சிக் காலத்தில்  மறைந்த தலைவா் அஸ்ரப்பைப் போன்று  சேவைகள் செய்யாவிட்டாலும்  குறிப்பிடக் கூடிய முறையில் அவா் செய்த சேவைகளை       இன்றும் நன்றாக  அனுபவித்து வருகின்றனா்.  ஆனால் கடந்த 2006ல்  பாராளுமன்றத் தோ்தலின்போது  அம்பாறை மாவட்ட  முஸ்லீம் பிரதேசங்களில் அவருக்கு  5000 வாக்குகள் கூட முஸ்லீம்கள் அளிக்கவில்லை.  முஸ்லீம் காங்கிரஸ் ஊடகவே 3 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தனா்.

– பேரியலின் சேவைகள் –

அஸ்ரப் வைத்தியசாலைக்கு பெயா்மாற்றி மத்திய அரசுக்கு கொண்டுவந்து அபிவிருத்தி செய்தமை,  கல்முனை நகர சபையை மாநகர சபையாக  தரமுயா்த்தியமை,  இஸ்லாமபாத்தில் தொடா் மாடி வீடமைப்புத்திட்டம்,  சனசமுக நிலையம், தொழிற்பயிற்சி நிலையம்,  மருதமுனை வைத்தியசாலை  புதிதாக நிர்மாணித்தமை, மருதமுனை கடலோரப் பாடசாலைகளை கரைவாகுக்கு வயல் நிலங்களை நிரப்பி காணிகள் பெற்றுக் கொடுத்தமை, கல்முனை,  சாய்ந்தமருது கல்முனைக்குடி போன்ற பிரதேசங்களில் கரைவாகு நிலங்களை பெற்றுக் கொடுத்து அதனை மண்நிரப்பி பாரிய வீட்டுத்திட்டங்களை ஏற்படுத்தியமை,  பெரியநீலாவனை மருதமுனையில் இஸ்லாமிக் ரிலீப்  தொடா்மாடி வீடமைப்புத் தி்ட்டம், கல்முனை வலயக் கல்விப் பணிமனைக்குத் தனியானதொரு கட்டடித்தினை இஸ்மாயில் புரத்தில் நிர்மாணித்து  அலுவலகத்தினை திறந்து வைத்தமை – கல்முனை கரையோர  பிராந்திய சுகாதார அலுவலகம் நிர்மாணித்து திறந்து வைத்தமை, கல்முனை கரையோர மாவட்ட  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி தனியானதொரு அலுவலகம் கல்முனையில் ஆரம்பித்தமை, சாய்ந்தமருது வைத்தியசாலை, மல்ஹருஸ் சம்ஸ், அல்ஹிலால், அல்ஜலால் றியாளுஜன்னாஹ் பாடசாலைகள் புதிதாக நிர்மாணித்தமை

 இஸ்மாயில் புரம் மல்வத்தையில் தனி 500வீடுகள் கொண்ட  வீடமைப்புக் கிராமம், நித்தவூர் அட்டப்பழம்  தொடா்மாடி வீடமைப்புத்திட்டம் நிர்மாணித்தாா். அட்டாளைச் சேனை விவசாய விஸ்தரிப்பு நிலையம் உப அலுவகலத்தினை அம்பாறையில் இருந்து ஆரம்பித்தமை, பொத்துவில் வைத்தியசாலை அபிவிருத்தி, நுரைச்சோலை சவுதி வீடமைப்புத்திட்டம், அட்டாளைச்சேனையின் பெண்கள் அபிவிருத்தி  வீடமைப்புத்திட்டம், சாய்ந்தமருது பேலிபேரியன் வீடமைப்புத்திட்டம், கல்முனைக்குடி தொடா் மாடி வீடமைப்புத்திட்டம், காரைதீவு சுகாதாரப் பணிமனை , மாவடிப்பள்ளி சுகாதார நிலையம் அம்பாறை மாவட்ட கரையோர நீா் விநியோகத்திட்டம், அக்கரைப்பற்று இறக்காம வீதியில் லயன்கழகம்  வீடமைப்புத் திட்டம், சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லுாாி அருகில் விவசாய விஸ்தரிப்பு உப அலுவலகம்,

கல்முனைககுடியில் 3 பாடசாலைகள்  புதிதாக நிர்மாணித்தமை, கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம், கல்முனை நுாலகத்தில் மேல் மாடியில்  அம்பாறை மவாட்ட மேலதிக அரசாங்க அதிபா் பணிமனை ஆரம்பித்து வைத்தமை , 540 பேர் தொண்டா் ஆசிரியா்களை நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுத்தமை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் நுாற்றுக்கு மேற்பட்ட  நியமனங்கள் வழங்கியமை, அம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்த அரச உத்தியோகத்தா்களுக்கு  கொழும்பில்  ஹோமகவில் அரச வீடுகள் 50 பெற்றுக் கொடுத்தமை, காரைதீவு பாடசாலை அபிவிருத்தி தற்பொழுது பஞ்சிகாவத்தை மாளிகாவத்தையில் ஜம்மியத்துல் உலாமா சபைக்கு தனது அமைச்சின் கீழ் இருந்த தேசிய வீடமைப்புக் அதிகார சபைக்குச் சொந்தமாக இருந்த காணியை வழங்கி தற்பொழுது உலமா சபை கட்டிடம் நிமிா்ந்து நிற்கின்றது.

இது போன்ற பல சேவைகள் அவா் செய்துள்ளாா். இவைகள் மக்களின் மனதில் மறைக்கடிககப்பட்டதா அல்லது அவா்கள் மறந்து வாழ்கின்றனரா ?

Web Design by The Design Lanka