பேலியகொடை பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்..! - Sri Lanka Muslim

பேலியகொடை பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்..!

Contributors
author image

Editorial Team

தண்டனை மற்றும் சித்திரவதை சட்டத்தின் கீழ் இறுதியாண்டு சட்டத்துறை மாணவன் மிகார குணரத்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் பேலியகொடை பொலிஸ் நிலையத்தின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மிகார குணரத்ன என்ற சட்ட துறை மாணவனை கடந்த 23 ஆம் திகதி பேலியகொட பொலிஸ் அதிகாரிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸிற்கு அழைத்து வந்த சந்தேக நபரை சந்திப்பதற்காக அவர் பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதுடன் இதன்போது சுமார் 10 பொலிஸ் அதிகாரிகள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகன் என தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team