பைசர் தடுப்பூசி இரண்டையும் பெற்ற மங்கள சமரவீர உயிரிழந்ததன் மர்மம் என்ன..? - Sri Lanka Muslim

பைசர் தடுப்பூசி இரண்டையும் பெற்ற மங்கள சமரவீர உயிரிழந்ததன் மர்மம் என்ன..?

Contributors

பைசர் தடுப்பூசி இரண்டையும் பெற்றும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஏன் மரணமடைந்தார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

மங்கள சமரவீர, நிமோனியா காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வந்தார். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது உடல்நிலை மோசமான கட்டத்தில்தான் இருந்தது.

சாதாரண நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே நேற்று திடீரென அவர் மரணமடைந்தார். கொவிட், நிமோனியா காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணத்தைத் தழுவிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் சமரவீர நீண்டகாலமாக நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயினால் அவதியுற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team