பொங்கல் பண்டிகை சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான சந்தர்ப்பம் – ஜனாதிபதி - Sri Lanka Muslim

பொங்கல் பண்டிகை சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான சந்தர்ப்பம் – ஜனாதிபதி

Contributors

பொங்கல் பண்டிகையானது நாட்டில் சமாதானத்திற்காகவும், மக்கள் மத்தியிலான நல்லிணக்கத்திற்காகவும் நன்றி செலுத்தும் சந்தர்ப்பம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

 

இந்த பண்டிகை, சூரிய பகவானின் ஆசிர்வாதத்துடன், வாழ்க்கையில் புதிய சந்தர்ப்பங்களுக்கான ஆரம்பமாக திகழ்வதாக ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தைத்திருநாள் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையே பலமான பிணைப்பை ஏற்படுத்துவதுடன், நாளாந்த வாழ்விலும், தெய்வ வழிபாட்டிலும் மக்களினதும், சமூகங்களினதும் ஐக்கியத்தை அடையாளப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

சிறந்த அறுவடைக்காக சூரிய பகவானுக்கு தைத்திருநாளில் மக்கள் நன்றி செலுத்தி தொடர்ச்சியான வெற்றிகள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, பொங்கல் பண்டிகை மனிதர்களிடையே நட்புறவையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கான ஒரு உன்னத சந்தர்ப்பம் என பிரதமர் டி.எம் ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 

சூரிய பகவானை வழிபடும் சிறந்ததொரு ஆன்மீக ரீதியிலான முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் தைப்பொங்கல் பண்டிகை, அனைவருக்கும் சௌபாக்கி்யம் நிறைந்த மகிழ்ச்சியான பண்டிகையாக அமைய வேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(nf)

Web Design by Srilanka Muslims Web Team