பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் 'பங்காளிகள்' அதிருப்தியில்: தயாசிறி..! - Sri Lanka Muslim

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ‘பங்காளிகள்’ அதிருப்தியில்: தயாசிறி..!

Contributors

கோட்டாபே ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு அனைத்து கூட்டணி கட்சிகளும் இணைந்து அளப்பரிய பங்காற்றியிருந்த போதிலும் தற்போதைய சூழ்நிலையில் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கிறார் சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.

தேர்தலின் பின்னர் பங்காளிக் கட்சிகள் நடாத்தப்படும் விதம் இந்த அதிருப்திக்குக் காரணம் என தெரிவிக்கின்ற அவர், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.

விமல் – கம்மன்பில குழுவினர் சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்த நிலையில் தயாசிறி இவ்வாறு கருத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team