பொதுநலவாய உச்சிமாநாடு : ஊடகவியலாளர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்த்த பின்னரே அடையாள அட்டைகள் வழங்கப்படும் - கெஹலிய » Sri Lanka Muslim

பொதுநலவாய உச்சிமாநாடு : ஊடகவியலாளர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்த்த பின்னரே அடையாள அட்டைகள் வழங்கப்படும் – கெஹலிய

Contributors

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் உச்சிமாநாட்டு பற்றிய செய்திகளை வழங்குவதற்காக விண்ணப்பிக்கும் சர்வதேச ஊடகவியலாளர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்த்த பின்னரே அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்ற 2011ம் ஆண்டின் உச்சிமாநாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை அங்கீகரிக்கும் அணுகுமுறையையே இலங்கையிலும் பின்பற்றப் படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊடகங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை மீளாய்வு செய்த பின்னரே லண்டனில் உள்ள பொதுநலவாய நாட்டு செயலகத்தின் நடைமுறைக்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளது.

Web Design by The Design Lanka