பொதுநலவாய மாநாட்டுத் தலைவர்களுக்கு விஷேட பாதுகாப்பு! » Sri Lanka Muslim

பொதுநலவாய மாநாட்டுத் தலைவர்களுக்கு விஷேட பாதுகாப்பு!

29t1

Contributors

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கும் அரசுத் தலைவர்களுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. அரசுத் தலைவர்களின் பிரத்தியேக பாதுகாப்பு நடவடிக்கைகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அரசு தலைவர்கள் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் பயணம் செய்யும் வீதிகளை பாதுகாக்கும் பொறுப்பு அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அமைச்சர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசுத் தலைவரின் பாதுகாப்பிற்கும் இராணுவ கேணல் நிலை வகிக்கும் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மிக மிக முக்கியமான அரசுத் தலைவர்களின் பிரத்தியேக பாதுகாப்புப் பணிகளுக்கு கமாண்டோ நிலை வகிக்கும் இராணுவ உயரதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Web Design by The Design Lanka