பொதுபலசேனா உறுப்பினரின் அறையில் 486 பொருட்கள் கண்டுபிடிப்பு » Sri Lanka Muslim

பொதுபலசேனா உறுப்பினரின் அறையில் 486 பொருட்கள் கண்டுபிடிப்பு

BBS

Contributors
author image

Editorial Team

குருநாகலை – மல்லவபிடிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனாவின் செயற்பாட்டாளர்கள் என தெரிவிக்கப்படும் இருவரில் ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும் கடை அறையொன்றில் இருந்து 486 வகை பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதன் போது , பத்திரிக்கைகள் , சுவரொட்டிகள் , ஆவணங்கள் , இருவெட்டுக்கள் உள்ளிட்ட 486 வகை பொருட்கள் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அவற்றில் வாசகங்கள் எழுத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பான பாதுகாப்பு கெமரா காட்சிகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும், இதற்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka