பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் நிமால் - Sri Lanka Muslim

பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சர் நிமால்

Contributors

ஹலால் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பொதுபல சேனா அமைப்பு இஸ்லாம் மதம் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் . கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் கொழும்பு மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது .

அவர் மேலும் , பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் முஸ்லிம் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுபல சேனா அமைப்புக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அரசாங்கத்திற்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

மதம் ஒன்றை அடிப்படையாக கொண்டு இன்னுமொரு மதத்தை விமர்சிப்பது பொருத்தமற்றது. பொலிஸாரும், நீதிமன்றமும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .

Web Design by Srilanka Muslims Web Team