பொது பல சேனா அமைப்பின் பின்னணியை மக்கள் அறிவர் - மஹிந்த பதில் » Sri Lanka Muslim

பொது பல சேனா அமைப்பின் பின்னணியை மக்கள் அறிவர் – மஹிந்த பதில்

mahi

Contributors
author image

Editorial Team

பொது பல சேனாவின் பின்­ன­ணியில் யார் இருக்­கி­றார்கள் என்­பது இப்­போது நன்­றாக விளங்­கு­கி­றது. இதனை மக்­களும் நன்கு அறி­வார்கள் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

அத்­துடன் தீவி­ரப்­போக்­கு­டைய எவ­ருக்கும் தாம் ஆத­ரவு வழங்­கு­வ­தில்லை எனவும் நாட்டின் இன நல்­லி­ணக்­கத்­திற்­காக முன்­னின்று
உழைப்பேன் எனவும் அவர் தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தனது உத்­தி­யோ­க­பூர்வ டுவிட்டர் கணக்கு மூலம் நேற்றுக் காலை பொது மக்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளித்தார். இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவ­ரிடம் கேட்­கப்­பட்ட கேள்­வி­களும் அளிக்­கப்­பட்ட பதில்­களும் வரு­மாறு:

கேள்வி : அம்­பாந்­தோட்­டையில் விவ­சாய நிலங்­களை விற்­பனை செய்­வ­தாக தெரி­வித்து எதிர்ப்பை வெளி­யி­டு­கின்­றீர்கள் . அவ்­வா­றாயின் உங்கள் ஆட்­சியில் சம்பூர் நிலத்தை வெளி­நாட்­டுக்கு வழங்­கி­யது ஏன் ?
பதில் : நுரைச்­சோ­லையை போன்றே சம்­பூ­ரிலும் திட்டம் ஒன்றை இந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் முன்­னெ­டுத்தோம். ஆனால் நாம் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் காணி­களை விற்­க­வில்லை.

கேள்வி : பிக்­குகள் அர­சி­யலில் எல்லை மீறிச் செயற்­ப­டு­வ­தாக பர­வ­லான விமர்­ச­னங்கள் காணப்­ப­டு­கின்­றன . இது குறித்து உங்­கள் நிலைப்­பாடு என்ன ?
பதில் : தற்­போ­தைய பிக்­கு­களின் செயற்­பா­டு­களை அர­சி­ய­லாக கருத முடி­யாது. ஏனென்றால் நாட்டில் நெருக்­க­டி­யான நிலை­மைகள் ஏற்­பட்ட அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் பிக்­குகள் முன் வந்து அதற்கு எதி­ராக செயற்­பட்­டனர். இது வர­லாறு ஆகும்.

கேள்வி : போர் வீரர்­க­ளுக்கு எதி­ரான அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் நியாயம் கிடைக்­குமா ?
பதில் :சட்­டத்தை மீறும் அனை­வரும் நீதியின் முன் நிறுத்­தப்­ப­டு­வார்கள்.

கேள்வி : எட்கா ஒப்­பந்தம் தொடர்பில் கூட்டு எதிர்க் கட்­சி­யி­னதும் உங்­க­ளதும் நிலைப்­பாடு என்ன ?
பதில் : நாங்கள் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம். பிரச்­சி­னை­களை தீர்க்­காது ஒப்­பந்­தத்தை வியா­பிப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல. இதன் ஊடாக இலங்­கையில் தொழில் பாது­காப்­பின்மை ஏற்­படும்.

கேள்வி : உங்­க­ளது இறுதி சீன விஜ­யத்தின் நோக்கம் என்ன ? சீனா உங்­க­ளிடம் கோரிய, நீங்கள் வழங்­கிய உறு­தியும் என்ன ?
பதில் : திட்­டங்­களை முன்­னெ­டுங்கள். ஆனால் மக்­களை இடம்­பெ­யரச் செய்­வதையோ இயற்­கைக்கு பாதிப்பு ஏற்­ப­டுத்­து­வ­தையோ அனு­ம­திக்க முடி­யாது. அதே போன்று சீனா எப்­போதும் இலங்­கையின் சிறந்த நண்பன். அவர்­க­ளது ஒத்து­ழைப்பு முக்­கி­ய­மா­னது.

கேள்வி : 2020 ஆண்டு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சுதந்­திரக் கட்­சியின் அமைச்­சர்கள் அறி­வித்­துள்­ளனர். அவரை எதிர்த்து நீங்கள் போட்­டி­யி­டு­வீர்­களா?
பதில் : எதிர்­காலத் தலை­வர்கள் நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்­வார்கள் என நான் நம்­பிக்கை கொள்­கின்றேன்.

கேள்வி : இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீண்டும் உங்கள் மீது நம்­பிக்கை வைத்­துள்­ளனர். இந்­நி­லையில் தீவி­ரப்­போக்­கு­டை­ய­வர்­க­ளுக்­கான உங்­க­ளது பதில் என்ன ?
பதில் : தீவி­ர­வா­தத்தை நாம் ஒரு போதும் அனு­ம­திப்­ப­தில்லை. எதிர்­கா­லத்­திலும் அவ்­வாறே. நாங்கள் எப்­போதும் இலங்­கையின் இன நல்­லி­ணக்­கத்­திற்­காக முன்­னிற்போம்.

கேள்வி : நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு தொடர்­பாக உங்கள் ஆட்­சியில் எவ்­வா­றான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும் ?
பதில் : சட்­ட­பூர்­வ­மற்ற நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு ஊடாக மேற்­கொள்­ளப்­படும் அர­சியல் பழி­வாங்­கல்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­பூர்­வ­மான நிறு­வ­னத்தை அமைத்து குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­படும்.

கேள்வி : இனப் பிரச்­சி­னைக்­கான தீர்­வாக 13 பிளஸ் அமுல்­ப­டுத்­து­வ­தாக இந்­தி­யா­விடம் கூறி­னீர்­களே
பதில் : அனைத்து சமூ­கங்­களின் நலன்­களும் பேணப்­ப­டு­கின்ற அர­சியல் தீர்வு தொடர்பில் நான் தொடர்ந்தும் உறு­தி­யாக உள்ளேன்.

கேள்வி : இளை­யோரை ஒன்­றி­ணைத்து நீலப்­ப­டை­யணி போன்ற அமைப்பை உரு­வாக்­கிய அர­சியல் பய­ணத்­திற்கு நீங்கள் தயார் இல்­லையா?
பதில் : இளையோர் அமைப்பை உரு­வாக்­கு­வது அவ­சி­ய­மாகும் .கூட்டு எதிர் கட்சி இளைஞர் அமைப்­பு­களை அணித்­தி­ரட்டி தலை­மைத்­துவம் வழங்கி வரு­கின்­றது.

கேள்வி : பொரு­ளா­தார வர்த்­தக வல­யங்கள் தொடர்பில் உங்கள் காலத்­திற்கும் தற்­போதும் உள்ள வேறு­பாடு என்ன ?
பதில் : நன்­றாக பாருங்கள் . மோத­லுக்கு பின்னர் முன்­னெ­டுக்­கப்­பட்ட அனைத்து திட்­டங்­களும் எமது காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டவை .

கேள்வி : எதிர்­கால தேர்­த­ல்­களில் வெற்றி பெறு­வீர்­களா ?
பதில் : தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வது வெற்றி பெறு­வ­தற்கே அன்றி தோல்­வி­ய­டை­ய­வல்ல.

கேள்வி : நாட்டை ஆட்சி செய்­வ­தற்கு மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வீர்கள்?
பதில் : யார் ஆட்சி செய்­தாலும் நிகழ்­கா­லத்­தையும் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ரையும் சிந்­தித்து செய­லாற்ற வேண்டும்.

கேள்வி : நாட்டில் அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. அது குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன ?
பதில் : அர­சாங்கம் பெற்­றுக்­கொள்­கின்ற கட­னுக்கு ஈடான அபி­வி­ருத்­திகள் நாட்டில் இடம்­பெற வில்லை என்­பது சாதா­ரண அறி­வுள்­ள­வர்­க­ளுக்கு கூட விளங்கிக் கொள்ள முடியும்.

கேள்வி : தேசிய வளங்கள் விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தற்கு எதி­ராக எவ்­வாறு நீங்கள் நட­வ­டிக்கை எடுக்கப் போகி­றீர்கள்.?
பதில் : பொது மக்­க­ளுக்கு மாத்­தி­ரமே அதனை நிறுத்த முடியும். மக்கள் அதற்கு எதி­ராக முன்­னிற்க வேண்டும்.

கேள்வி : வில்­பத்து காட­ழிப்பு தொடர்பில் உங்­கள நிலைப்­பாடு என்ன ?
பதில் :அபி­வி­ருத்­திக்­கா­கவோ அல்­லது மீள்­கு­டி­யேற்­றத்­திற்­கா­கவோ சூழலை அழிப்­பதை ஏற்க முடி­யாது.

கேள்வி : பாரா­ளு­மன்­றத்தில் வாக்­கெ­டுப்­புகள் இடம்­பெறும் போது நீங்கள் தொடர்ந்தும் சமூ­க­ம­ளிக்­கா­தது ஏன்?
பதில் : முக்­கி­ய­மான அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் நான் இருந்­தி­ருக்­கின்றேன்.

கேள்வி : பொது­பல சேனா உங்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைக்­கின்­றது. உங்கள் நிலைப்­பாடு என்ன ?
பதில் :பொது­ப­ல­சேனா அமைப்­பிற்கு பின்னால் யார் இருக்­கின்­றனர் என்­பதை தற்­போது மக்கள் அறி­வார்கள் .

கேள்வி : 2020 இல் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரானால் ஆலோ­சகர் என்ற வகையில் ஆத­ரவு வழங்­கு­வீர்­களா ?
பதில் : சுதந்­திரக் கட்­சியின் அப்­போ­தைய தீர்­மா­னத்­திற்கு அமை­வாக எனது தீர்­மானம் அமையும்

கேள்வி : உங்கள் ஆட்­சியில் உங்கள் குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு அதீத அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது.
பதில் : ஜன­நா­யக தேர்­தல்­களின் ஊடா­கவே அவர்கள் தெரி­வா­னார்கள் . கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் நாட்­டிற்­கான பங்­க­ளிப்பு அனை­வ­ருக்கும் தெரியும்.

கேள்வி : சீன எதிர்ப்பு நட­வ­டிக்கைகள் தொடர்­பாக சீன தூதுவர் உங்­க­ளு­ட­னான சந்­திப்பில் அதி­ருப்தி வெளி­யிட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது.
பதில் : அதில் உண்­மை­யில்லை. அது ஒரு சுமு­க­மான சந்­திப்பு

கேள்வி : போர்க் குற்ற விசாரணையில் சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் அதற்கு எதிராக செயற்படுவீர்களா ?
பதில் : அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை கொண்டு வரும் போது சீனா எப்போதும் எமது பக்கம் நின்றது.

கேள்வி : அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இலங்கைக்கு எவ்விதமான தாக்கத்தை தரும் ?
பதில் : அமெரிக்காவின் புதிய அரசாங்கம் ஏனைய நாடுகளின் இறையாண்மையை மதித்து புதிய வெளிவிவகார கொள்கையுடன் இராஜதந்திர ரீதியில் செயற்படும் என நான் கருதுகின்றேன்.

கேள்வி : ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தொடர்பான உங்களது நிலைப்பாடு என்ன?
பதில் : ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வெளிவிவகார கொள்கையுடன் நிர்வாகத்தை முன்னெடுப்பார்.

Web Design by The Design Lanka