பொது வாக்கெடுப்பில் எதிர்ப்பு ; ஸ்காட்லாந்தில் கலவரம் - Sri Lanka Muslim

பொது வாக்கெடுப்பில் எதிர்ப்பு ; ஸ்காட்லாந்தில் கலவரம்

Contributors
author image

World News Editorial Team

சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்பில் எதிர்ப்பு அதிகரித்ததை தொடர்ந்து ஸ்காட்லாந்தில் மோதலும், கலவரமும் ஏற்பட்டது.

 

இங்கிலாந்தில் இருந்து பிரிந்து ஸ்காட்லாந்து தனிநாடு ஆக பிரிய விரும்பியது. அதற்கான பொது வாக்கெடுப்பு சமீபத்தில் நடந்தது. அதில் ஸ்காட்லாந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து 55 சதவீதம் பேரும், ஆதரவு தெரிவித்து 44 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.

 

அதனால் இங்கிலாந்திடம் இருந்து ஸ்காட்லாந்து பிரியவில்லை. இதை எதிர்ப்பு கோஷ்டியினர் கிளாஸ்கோ நகரின் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு கொண்டாடினர்.

 

ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது ஸ்காட்லாந்து ஆதரவு கோஷ்டியினருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்களும் அங்கு கூடி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

அதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது.

தகவல் அறிந்ததும் குதிரைப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர். இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இக்கலவரம் மேலும் பல நகரங்களுக்கும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே இருதரப்பினரும் அமைதி காத்து ஒற்றுமையுடன் இருக்கும்படி ஸ்காட்லாந்து மக்களுக்கு ராணி எலிசபெத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team