பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப்பிரிவினை வழி நடாத்துவதற்கான நிதி - Sri Lanka Muslim

பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப்பிரிவினை வழி நடாத்துவதற்கான நிதி

Contributors
author image

A.M.தாஜகான்- Pottuvil (M.A. M.ED)

பொத்துவில் உப வலய பாடசாலையின் உயர்தர விஞ்ஞான கல்வி அபிவிருத்தி சம்பந்தமாக பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் அவர்கள் இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தோடு முயற்சியினை மேற்கொண்டதற்கு அமைவாக இஸ்லாமிக் ரிலீப் நிறுவனம் முதற் கட்டமாக பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப்பிரிவினை வழி நடாத்துவதற்கான நிதியினை ஒதுக்க முன் வந்துள்ளது.

 

இதற்கான ஆரம்ப நிதி 20000ரூபாவினை பொத்துவில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் அவர்களின் முன்னிலையில் பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியின்  அதிபர் ஏ.எல். கமறுதீன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 

இக் கையளிப்பு நிகழ்வில் உப அதிபர் என்.கே.அப்துல் அஸீஸ் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.எஸ். வாசீத் மற்றும் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம். ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கல்வி விடயத்தில் முன்னிற்கும் பொத்துவில் பிரதேச செயலாளருக்கு பொத்துவில் கல்விச் சமூகம் நன்றியினை தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team