பொத்துவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் திறப்பு விழா » Sri Lanka Muslim

பொத்துவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் திறப்பு விழா

181

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

யு.எல்.எம். றியாஸ்,  அகமட் எஸ். முகைடீன், ஏ.பி.எம்.அஸ்ஹர் 


பொத்துவில் பிரதேசத்தில் தனவந்தர் ஒருவரின் சொந்த நிதியினால் புதிதாக நிர்மாணிக்கப்படட பொத்துவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்ட்து.

பொத்துவிலை பிறப்பிடமாகவும் எஹலியக்கொடையை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம் எம்.ஆர்.எம் சதக்கத்துல்லாஹ் அவர்களின் 20கோடி ரூபாய் சொந்த நிதி உதவியுடன் இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய ஜும்மா பள்ளிவாசலில் சுமார் 5000 பேர்வரையில் தொழுவதற்கான இடவசதிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இவ் ஜும்மா பள்ளிவாசல் திறப்புவிழா நிகழ்வின் முதல் ஜும்மா பிரசங்கம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உப தலைவர் அஸ் – சேஹ் யூசுப் ஹனீபா (முப்தி) அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
இப் பள்ளிவாசல் திறப்பு விழா வைபவத்தில் நாட்டின் தலை சிறந்த உலமாக்களின் சிறப்பு பயான் நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இப் பள்ளிவாசல் திறப்புவிழா நிகழ்வில் நீர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்சா கலந்துகொண்டு விசேட உரையாற்றினார்.

இவ் வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,றிசாத் பதியுதீன்,பிரதிஅமைச்சர்களான.எஸ்.எஸ். அமீர் அலி,பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் உள்ளிடட மக்கள் பிரதிநிதிகள்,உலமாக்கள்,கல்வியலாளர்கள், உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

2 (6) 3 (3) 6 (2)

181

Web Design by The Design Lanka