பொத்துவில் துவ்வையாறு பகுதி நீர்ப்பாசன திட்ட அபிவிருத்தி பணிகள் - Sri Lanka Muslim

பொத்துவில் துவ்வையாறு பகுதி நீர்ப்பாசன திட்ட அபிவிருத்தி பணிகள்

Contributors
author image

சலீம் றமீஸ்

மத்திய மற்றும் கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களங்கள் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள பொத்துவில் துவ்வையாறு பகுதி 01, துவ்வையாறு பகுதி 02, நீர்ப்பாசன திட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

 

அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்களின் ஏற்பாட்டில் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பல மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

 

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்கான் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நீர்ப்பாசன அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

 

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், வீதி அபிவிருத்தி திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், அரச உயரதிகாரிகள், கல்விமான்கள், முக்கியஸ்தர்கள், விவசாய குழுக்களின்  பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

 

மேற்படி துவ்வையாறு நீர்ப்பாசன திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம் பொத்துவில் பிரதேச விவசாயிகளின் வாழ்வாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

alm athaullah

 

alm athaullah.jpg2

 

alm athaullah.jpg2.jpg3

 

alm athaullah.jpg2.jpg3.jpg4

 

alm athaullah.jpg2.jpg3.jpg4.jpg5

Web Design by Srilanka Muslims Web Team