பொத்துவில் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி நிகழ்வுகள் - Sri Lanka Muslim

பொத்துவில் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி நிகழ்வுகள்

Contributors
author image

சலீம் றமீஸ்

மேன்மைதாங்கிய அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ‘மஹிந்த சிந்தனை’ திட்டத்தின் கீழ் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் 125 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலமும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களது நிதி ஒதுக்கீட்டின் மூலமும் பொத்துவில் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி நிகழ்வுகள் 2014.09.02 ஆம் திகதி முழு நாள் நிகழ்வாக இடம் பெறவுள்ளது.

 

பொத்துவில் பிரதேசத்தில் இடம் பெறவுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளுக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் அழைப்பின் பேரில்  பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

 

இந்த நிகழ்வுகளின் போது பல்வேறு அபிவிருத்திப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்படுவதோடு , மக்கள் பாவனைக்காகவும் கையளிக்கப்படவுள்ளது.

 

புனர்நிர்மானம் செய்யப்பட்ட பொத்துவில் – செம்மனிக்குளம் திறப்பு விழா, துஐஊயு கிராம வீதி ஆரம்பிக்கும் நிகழ்வு, றொட்ட- மென்தோட விவசாய வீதி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, பொத்துவில்  அல்- அக்ஷா வித்தியாலய சுற்று மதில் ஆரம்பம், துவ்வையாறு P-ஐ திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, துவ்வையாறு P-ஐஐ திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, பஸரிச்சேனை விளையாட்டு மைதானம், விளையாட்டரங்கு வேலைகள் ஆரம்பம், தகராம்பளை விவசாய வீதி ஆரம்பம், தகராம்பளை பாலம் திறப்பு விழா,

 

பொத்துவில் வைத்தியசாலை வீதி ஆரம்பிக்கும் நிகழ்வு, பொத்துவில் கடற்கரை கொங்கிறீட் வீதி மக்களிடம் கையளிப்பு, பொத்துவில் மத்திய கல்லூரி கொங்கிறீட் வீதி மக்களிடம் கையளிப்பு, P.ஆ. காதர் கொங்கிறீட் வீதி, வடிச்சல் திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு, பொத்துவில் மத்திய கல்லூரி விளையாட்டரங்கு புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பித்தல், பாடசாலைகளுக்கான பேன்ட் உபகரணங்கள், சீருடைகள் வழங்கும் நிகழ்வு, விளையாட்டு கழகங்களுக்கான உபகரணங்கள், சீருடைகள் வழங்கும் நிகழ்வு, பள்ளிவாசல்கள், பொது அமைப்புக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வுகள் என்பன இடம் பெறவுள்ளன.

 

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் , கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், மட்டக்களப்பு மாகாணப் பணிப்பாளர் வி.கருனநாதன், அக்கரைப்பற்று மேலதிக மாகாணப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.நிசார், மட்டக்களப்பு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல்.திலகராஜா, அம்பாறை நீர்ப்பாசனப் பணிப்பாளர் கே.டி.நிஹால் ஸ்ரீவர்தன, அம்பாறை பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் யூ.எல்.எம்.நஸார்,  அம்பாறை பிரதம பொறியியலாளர் எஸ்.மஹிந்தன்,

 

அக்கரைப்பற்று பிரதம பொறியியலாளர் ஐ.எல்.ஏ.பாரி, அம்பாறை பிராந்திய உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீத், அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.காஸிம், பொத்துவில் உபவலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.அஸீஸ், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எம்.பஹிஜ், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் ஏ.பதூர்கான் ஆகியோர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்

Web Design by Srilanka Muslims Web Team